உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

147

பொறுமையும் அடக்கமும் நிரம்பப்பெற்று, தமிழ்மாணாக்கர் அமிழ்துஎன நுகர விரித்துரை கிளக்கும் தெரிப்பரும் பெருமை தமிழ்கற்கும் மாணாக்கர்கள் ‘இஃது அமிழ்தாகும்' எனச் சுவைத்துணரும்படி விரித்து உரைகூறுந் தெரிதல் அரிய பெருமையையுடைய, நாராயணன் எனும் தோலாப்புலவோன் நேர்படும் உளத்துச் சீர்பட அமர்ந்து - நாராயண சாமிப்பிள்ளை என்னுந் தோலாத புலவனது செவ்விய திருவுள்ளத்திற் சிறப்புறவீற்றிருந்து, கருவிநூல் உணர்த்தினை பல -கருவி நூல்களாகிய இயற்றமிழ் நூல்கள் பல உணர்த்தியருளினை;

கீழ்ப்பிறவிகளின்

வறுத்துக்கூறப்பட்டன.

அங்ஙனமே

துன்பநிலையும் இழிவுங் கருதி அப்பிறவிகளைக் கொண்ட காலங்கள் ‘ஒழிந்தன' வென பகுத்தறிவு மேம்பாட்டால் மக்கட்பிறவிக்கு உரிய பெருமை கருதிச் 'செவ்விய இந்நாள்' என அப்பிறவியைக்கொண்ட காலங்கள் சிறப்பிக்கப்பட்டன

'செவ்வந்தி', திருச்சிராப்பள்ளி; "செவ்வந்திப்புராணம் என்னும் வழக்கால் ஈதுணரப்படும். இது 'திரிசிரபுரம்' எனவும் வழங்கும். 'கண்டு’, ஓதி யென்னும்பொருட்டு. மொழியறிவு கொண்டு மக்கள் அறிந்து கொள்ளுதற்குரிய கருத்துகள் இங்கு 'மெய்ப்பொருள்' எனப்பட்டன. சொற்பொருள்வன்மை யெனப்படுவது, சொல்லும் அச்சொல்லுக்கு உரிய பொருளுமான இலக்கண இலக்கிய மொழியாராய்ச்சி.

'செறிவு' அடக்கம்; இஃது இப்பொருட்டாதல் "செறிவறிந்து சீர்மை பயக்கும்” என்னுந்திருக்குறளுரையிற் காண்க. “மெய் மொழி மனங்கள் தீநெறிக்கட்செல்லாது அடங்குதல்' அடக்கமெனவும், 'காரணம்பற்றியாதல்

LOL

66

மையா னாதல் ஒருவன் தமக்கு மிகை செய்தவழித் தாமும் அதனை அவன்கட் செய்யாது பொறுத்தல்” பொறையெனவும் திருக்குறள் (அடக்கமுடைமை, பொறையுடைமை) உரைகாரர் பரிமேலழகர் கூறுகின்றமை இங்கு நினைவுகூர்ந்து பொறையும் செறிவும் வேறுவேறாதல் உணர்ந்துகொள்க.

'விரித்துரை கிளத்தல்' என்றது, ஈண்டுப்புலமை தோன்ற உரையாடலை, ஆவது ‘சொல்வன்மை'யென்க. 'தெரிப்பு' தொழிற்பெயர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/172&oldid=1586916" இலிருந்து மீள்விக்கப்பட்டது