உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

  • மறைமலையம் - 20

'நாராயணன்' என்பது அடிகளுக்குத் தமிழிலக்கண இலக்கியங்கள் செவியறிவுறுத்திய இயற்றமிழாசிரியரின் பெயர்; 'தோலாப் புலவோன்' தோல்வியடையாத புலவன். 'தோலா மொழித் தேவர்' எனப் பிறரும் இப்பொருட்டாய்ச் சிறப்பிக்கப் படுதல் காண்க. 'புலவன், ‘ஈறுதிரிந்து ‘புலவோன்' என்றாயிற்று.

மெய்ப்பொருட்கருத்துகள் அறியவேண்டும் ஒருவன் அவற்றை ஒருமொழியின் வாயிலாகவே அறிதல் வேண்டு மாகலின், ஈண்டுத் தமிழ்மொழியின் இலக்கண இலக்கிய நூல்கள் 'கருவிநூல்' எனப்பட்டன. அவையாவன, தொல்காப்பியமும் பத்துப்பாட்டு எட்டுத் பதினெண்கீழ்க்கணக்கு ஐம்பெருங்காப்பியம் முதலாயினவுமாம்.

தம்

தாகை

அடிகள் இப்பகுதியில் தமக்குத் தமிழ்செவியறிவுறுத்திய இயற்றமிழாசிரியரின் அருமைபெருமைகளை இனிதெடுத்துக் கூறி மகிழ்ந்தமை கருத்திற்பதிக்கற்பாலது.

-

(32- 46) அதன்பின் - அதன்பின்பு, ஒருவா யாணர் மருவுறு சென்னைத் தவம்பெறத் தோன்றி நீங்காப் புதுவருவாய் மருவுதலுடைய சென்னைமாநகரின் கண் தவமுண்டாகத் தோன்றியருளி, நவை அறு தமிழும் வடநூல் பரப்பும் நிலை கண்டு உணர்ந்து குற்றம் அற்ற தமிழ்நூல்களும் வடநூற் பரவையும் ஆழம்வரையிற்சென்று தெரிந்து, ஆங்கு உள் உறை கருவாய்த் தெள்ஒளி விரிக்கும் சைவசித்தாந்த முடிப்பொருள் எடுத்து - அவற்றின்கண் உட்கிடக்கும் முதற் பொருளாய்த் தெளிந்த அறிவொளிவிரிக்குஞ் சைவசித்தாந்தம் என்னும் முடிந்தபொருளையெடுத்து, ஈங்கு அறம் கரை நாவின் திறம்பட விளக்கிப் புறம்படு சமயப் பொய்ப்பொருள்

நூறி

இத்தமிழகத்தில் தமது அறத்தையே நவிலும் நாவினால் திறம் உண்டாக விளக்கி அவ்வாற்றாற் புறமாய் ஒழியும் புறச்சமயங்களின் பொய்மைப் பொருள்களை அழித்து, நலம் கிளர் தன்மையும் புலம்கொளாக் காட்சியும் இயைந்து ஒருங்கு

ஈண்டிய அமையாப்பெருமைச் சோமசுந்தரத் தோம்

6

அறுதேசிகன் - நன்மைமிக்க இயல்பும் எளிதில் அறிதலியலாத அறிவுஞ் சேர்ந்து ஒன்றாய்த்திரண்ட அடங்காப் பெருமையை யுடைய சோம சுந்தரன் என்னுங் குற்றமற்ற ஆசிரியனுடைய, உடல்பொருள் ஆவி இடம் எனக் கொண்டு - உடலும் பொருளும் ஆவியுந் தேவரீர் அமருந் திருக்கோயிலெரனக்கருதி எழுந்தருளி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/173&oldid=1586917" இலிருந்து மீள்விக்கப்பட்டது