உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

149

பொருள் ஆர் சைவம் தெருளுறக் கொளீஇ - உண்மை நிரம்பிய சைவசமயப்பொருளை அறிவிற் பொருந்தும்படி அறுவுறுத் தருளி, அதற்கு அமை பொருளும் நீ யெனக்காட்டித் திறம்படி உணர்த்தினை மிகவே அச்சைவசமயத்துக்கு உரிய முழு முதற்பொருளுந் தேவரீரே எனத்தெளிவித்துத் திறமுண்டாகப் பெரிதும் உணர்த்தி யருளினை; அதன்பின் - அதன் பின்பு;

-

ஒருகால் வந்த வருவாய் ஒழியுமுன்னரே மீண்டும் மீண்டும் புதுப்புது வருவாய்ப்பொருள்கள் கலத்தானுங் காலானும் மேலுமேலும் வந்து சேர்தலுடைமையின், ஈண்டுச் சென்ன பட்டினம் “ஒருவாயாணர் மருவுறு சென்னை” யெனப்பட்டது; ‘யாணர்’ என்னுஞ்சொல் 'புதுவருவாய்' எனப்பொருடரல், “புதிதுபடற் பொருட்டே யாணர்க்கிளவி' (தொல்காப்பியம், உரியியல்., 81) என்பதனாலறியப்படும்.

“பிரசம் தூங்கும் அறாஅ யாணர் வரையணி படப்பை நல்நாட்டு”

என்னும் புறநானூற்றில் (375) கண்ணும்

இச்சொல்

இப்பொருட்டாய் வருதலும், அடிகள் இங்கு 'ஒருவாயாணர்' என்றாற்போலவே, ‘அறாஅ யாணர் என அடையடுத்து

வருதலும் நினைவுகூரற்பாலன.

தமிழ்மொழியின்கண் உள்ள நூல்கள் சிலவேயாயினும் அவை பொய்ம்மை நவிலுங் குற்றம் அற்றுப் பட்டாங்கு கிளப்பனவாயிருத்தலின் ‘நவையறுதமிழ்’ எனவும், வடமொழி யின்கண் அவ்வாறின்றி நூல்கள்மட்டும் நிரம்பக் காணப் படுதலின் வாளா ‘வடநூற்பரப்பு' எனவும் அவ்விரு பரு மொழிகளின் வேற்றுமை தேற்றி அடிகள் இங்கெடுத்துக் காட்டிய திட்பநுட்பம் பெரிதும் அறிந்து மகிழற் பாலனவாம்.

‘கரு’ முதற்பொருள்;

‘சைவ சித்தாந்தம்' என்னும் மெய்ப்பொருள், முடிந்த அறிவு ஆராய்ச்சிகள் வாய்ந்து அவற்றின்வடிவாய் அமைந்திருத்தலின், அஃது ‘ஒளிவிரிக்குஞ் சைவசித்தாந்தம்' எனவும், 'முடிபொருள்' எனவுங் கிளந்தோதப்பட்டது.'ஒளி' யென்பது ஈண்டு ‘அறிவு ஒளி’ யென்க. ஏனைச்சமயப்பொருள்கள் அத்தனையும் அங்ஙனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/174&oldid=1586918" இலிருந்து மீள்விக்கப்பட்டது