உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

மறைமலையம் - 20

முடிந்த அறிவாராய்ச்சிகளான் இயலாது அறியாமையிருளும் உடன்விராய் மங்குதலின் இச்சைவ சித்தாந்தம் மட்டும் அவற்றின் உள்ளுறை கருவாய்க்கிடந்து தெள்ளொளிவிரிக்கும் முடிபொரு ளாயிற்றென்றுணர்ந்து கொள்க. தமிழ்நான் மறைகளிலும் வடநூன்மறைகளிலும் சைவசித்தாந்தம் இங்ஙனம் முடிந்த நிலையில் வைத்து அறிவுறுக்கப்பட்டிருக்கும் அரிய உண்மை. வேத மென்னும் பாதவம் வளர்த்தனை பாதவ மதனிற் படுபயன் பலவே அவற்றுள்,

இலைகொண்டு உவந்தனர் பலரே இலையொரீஇத் தளிர்கொண் டுவந்தனர் பலரே தளிரொரீஇ

அரும்பொடு மலர்பிஞ் சருங்கா யென்றிவை விரும்பினர் கொண்டுகொண் டுவந்தனர் பலரே

அவ்வா றுறுப்பு மிவ்வாறு பயப்ப

ஓரும் வேதாந்தமென் றுச்சியிற் பழுத்த

ஆரா வின்ப அருங்கனி பிழிந்து

சாரங் கொண்ட சைவசித் தாந்தத்

தேனமுது அருந்தினர் சிலரே

எனக் குமரகுருபர அடிகள் திருவாய் மலர்ந்தருளிய பண்ட ார மும்மணிக் கோவை (10) யடிகளாலும் இனிது விளங்குகின்றமை காண்க.

‘அறம் கரை நா’, நன்றாவனவே எடுத்துப் பேசும்நா; அறம் நல்லது, தக்கது; “அறமென்பது தக்கது” என்பர் இறையனாரகப் பொருளுரையாசிரியர் (29).

'புறம்படுசமயங்கள்' என்பன: உலகாயதம், நால்வகைப் பௌத்தம், ஆருகதம் என அறுவகைப்படும் புறப்புறச்சமயங் களும்; தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம் யோகம், பாஞ்சராத்திரம் என ஆறுவகைப்படும் புறச்சமயங்களுமாம்; னிப், பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாதசைவம் என அறுவகைப்படும் அகப்புறச்சமயங்களும்; பாடாணவாதசைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/175&oldid=1586919" இலிருந்து மீள்விக்கப்பட்டது