உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

151

சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவர வவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம் என ஆறுவகைப்படும் அகச் சமயங்களும் ஆகும். இவை குறைபாடுகள் பல உடையவாகலின், அவையும் சித்தாந்த சைவத்திற்குப் ‘புறம்படுசமயப் பொய்ப்பொருள்' களாயின வென்பது.

புறப்புறம், புறம், அகப்புறம், அகம் என்னும் புறச்சமயங்களின் கோட்பாடுகள் எல்லாம் சிவஞான போதமா பாடியத்தில் (சிவஞான போதம், அவையடக்கம்) ஆசிரியர் சிவஞான முனிவராற் சமய இலக்கண அளவைநூனெறிகள் வாழாமல் நன்கெடுத்து விளக்கப்பட்டிருக்கின்றன. இங்கு விரிப்பிற் பெருகும். நூறி அழித்து; “அருஞ்சமந்ததைய நூறி” (புறம். 93).

இனி இவ்வெல்லாச் சமயங்கட்கும் முடிந்தநிலையில் அமர்ந்து தெள்ளொளிவிரிக்குஞ் சித்தாந்த சைவத்தின் சிறந்த கோட்பாடுகளை விளக்கும் வாயில் பின்னே “புலவராற்றுப் படையில்” (193 -205) வருதலின், அவைதம்மை அங்கே கண்டுகொள்க.

ஏனையோ, ரறிவுக்கு எட்டாத அகன்றஅறிவு இங்குப் 'புலங் கொளாக்காட்சி' யெனப்பட்டது. ஈண்டிய - திரண்ட, (புறம், 17). ‘அமையா’வென்றது, எண்ணுதற்குஞ் சொல்லுதற்கும் அடங்காத வெனக்கொள்க. தோம் - குற்றம்; “தோமறுகடிகை (சிலப்பதி காரம், 10, 98).

‘சோமசுந்தரதேசிகன்' என்பார் அடிகளுக்குச் சைவ சித்தாந்த மெய்ப்பொருள் அறிவுறுத்தருளிய சமயாசிரியராவர். 'பொருள் ஆர் சைவம்’, மெய்மை நிறைந்த சைவசமயம்; மெய்மையாவன ஆண்டவனுக்குப் பிறப்பிறப்புக்கூறாமையும், மாயையும் உயிரும் இறைவனேயெனக் போல்வன. தெருள் - அறிவு, (பிங்கலந்தை).

கிளவாமையும்

முருகப்பெருமான் பிறப்பிறப்பில்லா

முழுமுதற்

செம்பொருளாகிய சிவத்தின் இளமைக்கோலமேயாகலின்,

அவன் சைவசமயத்துக்கு உரியபொருளானானென்பது.

இனித் 'தொழும்பு பூண்’

டென்பது தொட்டு

'ஒற்றியூரெனும் பெயர் முற்றத்தோன்று' மென்பது வரையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/176&oldid=1586920" இலிருந்து மீள்விக்கப்பட்டது