உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மறைமலையம் - 20

ஐவகை ஏதுக்கள் காட்டித் திருவொற்றியூரென்னும் பெயரமைப்பு எடுத்தோதப்படு கின்றது.

(47-50) தொழும்பு பூண்டு ஒழுகும் அழுங்கா உள்ளத்து தொண்டு செய்தலை மேற்கொண்டு நடக்கும் அழியாத திருவுள்ளத்தையுடைய, தொண்டரும் நரகரும் அண்டரும் பிறரும் - அடியாரும் நாகரும் தேவரும் ஏனையோரும், வழிவழி அடிமை பெருகுற எழுதிய ஓலைகொண்ட ஒருமரபானும் - தாம் வழிவழி அடிமையாயிருத்தலை மேலும் மேலும் பெருகும்படி ஒற்றிவைத்தெழுதிய ஒற்றி ஓலையினைக் கைக்கொண்டருளிய ஒருதன்மையானும்.

தொண்டு பூண்டொழுகுதலிற் சிறிதுந் தளர்வடையாமல் மிக்க உறைப்பொடு நிற்கும் உள்ளமே இங்கு ‘அழுங்காஉள்ளம்’ எனப்பட்டது; அழுங்கல் - அழிதல், “பிணன் அழுங்க” புறம், 98. தொழும்பு அடிமை; “ஆளுந்தொழும்பும் அடிமையாகும்" திவாகரம்.

'நரகர்' கீழுலகத்தவராவர்; அவர் 'நாகர்', ‘அண்ட ர்' மேலுலகத்தவர்; அவர் தேவராவர்; சூடாமணிநிகண்டு. 'பிற' ரென்பது இவரல்லாத ஏனை மேன்மேலுலகங்களிலிருப்பவர். அவர் 'விஞ்ஞானகலர்' முதலியோராவர். இவரெல்லாரும் ஆண்டவனுக்குத் தலைமுறை தலைமுறையாக அடிமைப் பட்டிருத்தலின், இனிமேல் வருந் தலைமுறைகளிலும் அங்ஙனமே அடிமைப்பணி புரிவதாகத் தமது அடிமையை அவன்றிருவடிக்கு ஒற்றிவைத்து எழுதிக்கொடுத்த ஓலையென்பது விளங்க ‘வழிவழி யடிமை பெருகுற எழுதிய ஓலை' எனப்பட்டது. ‘ஒற்றி ஓலை' கொண்டமையின் ஒற்றியூராயிற்றென்பது.

மரபு - தன்மை; “தெறலருமரபு” புறம், 126. ‘ஆன்' என்னும் மூன்றனுருபு ஏதுப்பொருளது.

ல்

உலகம்

(51-53) உலகில் சிறந்து தான் ஒன்றே ஆகியும் எங்கணும் உள்ள ஏனைத்திருப்பதிகளினும் பார்க்கத் தெய்வத் தன்மையாற் சிறந்து அங்ஙனஞ் சிறக்குந் தனிமையால் தான் ஒன்றேயாயிருந்தும், அலகு இல் ஆற்றல் தலைவரும் என்பது அளவில்லாத தெய்வ வலிமை தலைமையாக் கூடுமென்பது விளங்க, வல்ஒற்று ஆக்கிய குறிப்பினானும் - மெல்லினமெய் வல்லினமெய் ஆக்கின குறிப்பானும்;

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/177&oldid=1586921" இலிருந்து மீள்விக்கப்பட்டது