உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

153

இணையில்லாமையின் தனிமையாயிற்று, அதாவது ஒன்றாயிற்றென்பது; அங்ஙனந் தனிமையாய் ஒன்றேயாயினும், பேராற்றலுடையதாகுமென்பது தோன்ற இடைநின்ற னகர ஒற்று வலித்து வல்லொற்றாய் ஒற்றெனப்பட்டுப், பின்னர்ப் பெயர் விகுதியாகிய இகரம் மருவி 'ஒற்றி' யாயிற்றென்பது. அலகு-அளவு; ஆற்றல் - வலிமை; பிங்கலந்தை. தலை - தலைமை, (இரேவணாசித்தர் சூத்திரம்).

-

(54-55) ஒற்றை இயக்கும் உயிரே போல ஒற்றெழுத்தை இயங்கச்செய்யும் உயிரெழுத்தேபோல், நெற்றி அம் கண்ணன் நிலவுதலானும் நெற்றிக்கண் உடையவனான சிவபெருமான் இத்திருப்பதியை இயக்கிக்கொண்டு ஆங்கு விளங்குதலானும்;

-

ஒற்றெழுத்தோடொத்தலின் தானும் ‘ஒற்றி' யென்னும் பெயர்த் தாயிற்றென்பது. முன்போற் பெயர்விகுதி புணர்த்துக் கொள்க. மேல்வருவனவற்றிற்கும் இஃதொக்கும். ஏகாரம் இசைநிறை; அம்சாரியை.

(56-57) இறைவன் ஐந்தொழில்

L படைத்தல் காத்தல்

அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் றைவனுடைய ஐந்தொழில்களையும், நிறைஉயிர்மாட்டுப் பொருந்தச் செய்யும் அரும் திறலானும் உடம்புகளில் நிறைந்துநிற்கும் உயிர்களின் பாற் பொருந்தும்படி செய்யும் அரியவல்லமையானும்;

-

றைவனைந் தொழில்களின் இயல்புகள் 'நீயே, ஆருயிர்த் தொகுதிக்குப் பேறுதரல்வேண்டி யைந்தொழி லியற்றுவை மாதோ’ (27-8) என்றவிடத்து விளக்கப்பட்டுள்ளன.

‘நிறையுயிர்’ உடம்புகளில் நிறைந்து காணப்படும உயிர்கள்; அன்றிக் கணக்கில்லாத உயிர்கள் எனலுமாம்.

உயிர்கள் திருவொற்றியுரின் கண் வாழ்தலான் ஆண்டவன் றிருவருளைப் பெறுதற்குரிய தகுதியை யடைந்து அவன்றன் ஐந்தொழில்கள் பொருத்தப் படுகின்றன. அங்ஙனம் அவ்வுயிர் கட்கு அவ்வைந்தொழில்களையும் ஒன்றச்செய்யும் ஆற்றல் உடைமையின் இவ்வூர் ஒற்றியூரெனப்படுவ தாயிற்றென்பது. ஒன்றியூர் என்பது ஒற்றியூரென வலித்தது.

(58-59) ஐந்தொழிற்பட்ட ஆருயிர்த் தொகைகள் - மேற் கூறிய அவ்வைவகைத் தொழில்களிற் பொருத்தப்பட்ட நிறைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/178&oldid=1586922" இலிருந்து மீள்விக்கப்பட்டது