உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

மறைமலையம் - 20

உயிர்க்கூட்டங்களை, கந்தழிப் பொருத்தும் மைந்தினானும் கந்தழி' யென்னுந் தீப்பிழம்பாகிய சிவத்தின் திருவருளில் தலைக்கூட்டும் வலிமையினானும்;

‘கந்தழி’ யென்பது தீப்பிழம்பு; எல்லாம் வல்ல முழுமுதற் சிவபிரானுடைய தெய்வவியல்புகள் பெரும்பான்மையும் மண்முதலான ஐம்முதற்பொருள்களுள் தீயின்கண் மட்டுமே நன்கு விளங்குதல்பாற்றிக் 'கந்தழி' யென்பது யென்பது இங்குச்

சிவபெருமானை உணர்த்துவதாயிற்று.

“கொடிநிலை கந்தழி வள்ளி யென்னும்

வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றுங்

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே.

(தொல்காப்பியம், புறத்திணையியல், 33)

சொல்

என்னுஞ் சூத்திரத்தின்கண்ணுங் ‘கந்தழி' யென்னும் தீப்பிழம்பை உணர்த்துமுகத்தால் முழுமுதற் சிவத்தின் வழிபாட்டுக்கு ஓர் ஒப்பற்ற வாயிலாய் நிற்றல் அறியற்பாலது. அடிகட்கு இக்கருத்துண்மை, அடிகளே தாம் பெரிதாராய்ந்து இயற்றியருளிய மாணிக்கவாசகர் மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் மிகப்பெரிய அரியநூலில் (பக்கம், 487-492) இத்தொல்காப்பிய நூற்பாவையே யெடுத்து மிக நுணக்கமான விளக்கவுரை விரித்துரைத்தல்கொண்டு நன்கு தெளியப்படும்.

‘மைந்து’ வலிமை; 'மைந்துடைக் கழைதின் யானை' (புறம், 73) என்பதனுரையிற் காண்க..

கந்தழியில் உயிர்த்தொகைகளை ஒற்றும் ஊராகலின், ஒற்றியூரெனப்பட்டது.

-

என

(60-61) ஒற்றியூர் எனும்பெயர் முற்றத்தோன்றும் இவ்வாற்றால் திருவொற்றியூர் என்னும் பெயர் முடியவிளங்கும், பெருநன் மாநகர் திருவின்பொலிந்து - பெரிய நல்ல அழகிய நகரத்தில் சிறப்புடன் விளங்கி;

‘முற்ற’என்பது “முற்றத்துறத்தல்”, “முற்றக்கடிதல்' எனுஞ் சொற்றொடர்களிற்போல முழுதும் என்னும் பொருட்டு; அஃதாவது எஞ்சாமை; 'ஒற்றியூர்' எனும் பெயர்க்குரிய பொருள்களெல்லாம் எஞ்சாமைப் பெறுதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/179&oldid=1586923" இலிருந்து மீள்விக்கப்பட்டது