உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

155

(62-63) குவளைபூத்த பவளத்தாமரை- இரண்டு சிறிய குவளைப் பூக்கள் தன்கண் பூக்கப்பெற்ற பவளநிறம் வாய்ந்த ஒரு பெரிய செந்தாமரை மலர், செவிரமும் பணிலமும் புடைபட - பாசியுஞ் சங்குந் தன் மேல்கீழ்ப் பக்கங்களிற் பொருந்த, இடையில் தோன்றியன்ன - அவற்றினிடையே தோன்றினாற் போல, கருநெறிக் கூந்தலும் பெருகிய கழுத்தும் மேலுங் கீழுந்தோன்றநெளியினையுடைய கரியகூந்தல் மேலும் பெருத்த

கழுத்துக்

கீழுமாய் விளங்க, காண் கு திருமுகம் அவற்றினிடையிற் காணப்படும் அழகிய திருமுகத்தின்கண், வாலிய நறுமுத்து அன்ன முறுவல் செறிதொறும் மின் என மிளிரும் வெள்ளிய நல்ல முத்தையொத்த இளநகை தோன்றிமறையும் போதெல்லாம் மின்னலைப்போல் ஒளிவீசும், பொன்மாமேனி மகளிரொடு விளங்கும் தகைசால் தோற்றத்து பொலிவுகொண்ட அழகிய திருமேனியையுடைய வள்ளி தெய்வயானை என்னும் மகளிரோடு இணைந்து விளங்குகின்ற அழகு நிரம்பிய காட்சியுடன்;

பவளத்தாமரை சிவந்த

குவளை கண்களுக்கும், முகத்துக்கும், செவிரம் கூந்தலுக்கும், பணிலம் கழுத்துக்கும் உவமையாகும்.

6

திருமுக' மென்பதற்கும், 'தோற்றத்து' என்பதற்கும் முறையே ஏழனுருபும் மூன்றனுருபும் விரித்துக்கொள்க.

அலையொழுங்குபோல் நெளிநெளியாய்க்

படுதலின், 'நெறிக்கூந்தல்' எனப்பட்டது.

காணப்

'வால்' வெண்மைப் பொருட்டாதல் “வால் வளைமேனி வாலியோன்” (5:171) என்னுஞ் சிலப்பதிகாரத்தா லுணரப்படும். செறிதொறும் - தோன்றி மறையுந்தோறும், 'தோன்றி’ அவாய் நிலையான் வந்தது; 'செறிதல்' இப்பொருட்டாதல், “நளிமலர்ச் செறியவும்" (சிலப்பதிகாரம், 2, 56) என்பதனுரையிற் காண்க. மிளிரும் என்னும் பெயரெச்சம் ‘மகளிர்' என்னும் பெயர் கொண்டு முடிந்தது.

(70-77) வடிவேல் ஏந்திக் கடிமயில் ஊர்ந்து - கூரிய வேற்படையைத் திருக்கையிற்பற்றி விரைவுமிக்க மயிலின்மேல் இவர்ந்து வந்து, என் உள்ளத்தாமரை விள்ள வீற்றிருந்தனை அடியேனது உள்ளமென்னுந் தாமரைமொட்டு மலர ஆண்டு

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/180&oldid=1586924" இலிருந்து மீள்விக்கப்பட்டது