உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

மறைமலையம் - 20

எழுந்தருளினை, பகல்ஒளி விளக்கும் பல்கதிர் ஞாயிறு பகலாகிய ஒளியை எங்கும் விளங்கச்செய்யும் பலவாகிய கதிர்களையுடைய கதிரவன், மலைநிவந்து அன்ன நிலை உயர் மாடத்தும் - மலையுயர்ந்தாற்போல் எழுநிலையுயர்ந்த பெரிய மாளிகையிலும், குடிகள் தங்காப் பழியொடும் இடிந்து வெருப்பேய் சேர எருக்குமுளைத்துப் பாழ்படு பொல்லா இல்லினும் - குடியிருப்புப் பொருந்தாத பழிப்பினையுடைமை யோடுஞ் சுவரெல்லாம் இடிந்து அச்சந் தரற்குரிய பேய்க்கூட்டங்கள் நடமாட எருக்கஞ் செடிகள் முளைத்துப் பாழ்பட்ட தீய குடிலின்கண்ணும், போழ்கதிர் விரித்துப் பொலிவதால் என - இருட்பிழம்பைப் பிளக்குந் தன் ஒளிக் கதிர்களை விரித்து விளங்கினாற் போலவென்க.

பொலிவதாலென

விள்ளவீற்றிருந்தனை

யென

வினைமுடிக்க, அருள்செய்தற்பொருட் விரைந்துவருதலிற் ‘கடிமயில் என்றார்.

மக்களின் உள்ளம் தாமரை முகைபோல் அமைந்திருத் தலால் ‘உள்ளத்தாமரை’ எனப்பட்டது. அன்புமுதலிய நல்லியல்புகளால் அவ்வுள்ளத்தாமரை மலருமாயின் அப்போது அஃது ஆண்டவன் எழுந்தருளி விளங்குதற்குரிய இடமாகும். "மலர்மிசை ஏகினான்” (திருக்குறள் 3) என்று தெய்வத் திருவள்ளுவர் கூறியருளினமையுங் காண்க. மேலும் இந்நூலாசிரியர் இங்ஙனமே 'விரையவிழ்தாமரை புரை உரவோர் உளம் புரி நெகிழ்ந்து அலர’ (19–102-3) என்று அவ்வுள்ளத்தின் மலர்ச்சியிலேயே கருத்துடையராய்ப் பிறாண்டும்

அருளிச்செய்தல் காண்க.

‘விள்ளல்’ மலர்தல், இப்பொருட்டாதல் பிங்கலந்தையிற்

காண்க.

‘நிவத்தல்’ ஈண்டு உயர்தல், இது முன்னும் வந்தது. 'வெரு' வென்பது அச்சப்பொருட்டு,

குடியில்லாத வீடு இடிந்து குட்டிச்சுவராய் எருக்கு முளைத்துப் பேய்கட்கே இருப்பிடமாய்ப் பாழாய் ஒழிதல் கண்கூடு. எனினும், எங்கும் ஒளிவிளங்குங் கதிரவன், எழுநிலை மாடத்தின்கண் எங்ஙனந்தன் ஒளிகாட்டி விளங்குகின்றானோ, அங்ஙனமே அப்பாழான வீட்டிலும் ஓரமில்லாமல் வெயில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/181&oldid=1586925" இலிருந்து மீள்விக்கப்பட்டது