உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

157

காட்டி விளங்குகின்றான். அங்ஙனமே நடுநிலை வழாத ஆண் வன் எல்லா நல்லியல்புகளும் ஒருங்கு பொருந்திய சான்றோர் திருவுள்ளத்தின்கண் எழுந்தருளி யிருத்தல்போலவே, அந்நல்லியல்புகளுள் ஒன்று தானுமில்லாத ஏழையோன் உள்ளத்தின்கண்ணும் எழுந்தருளினன் என்றருளிச்செய்தார். இங்ஙனங் கூறியது ஆண்டவனுடைய ய பெருமையையும் நடுநிலைவழா அருட்டன்மையை யும் விளக்கியபடியாம்.

14. தலைமகள் பிரிவாற்றாது புலம்பல்

"பொலியு மதியும் புலிபோலத் தென்றல்

நலியூ நமனானான் நல்வே - ளொலிதமி

ழோவா திசைக்குந் திருவொற்றி யொள்வேலான்

மேவான் செயலறியேன் மேல்

-

(இ-ள்) பொலியும் மதியும் - திங்களும் நிலவு விரித்து விளங்கும், புலிபோலத் தென்றல் நலியும் புலியைப்போல் தென்றற் காற்றும் மெல்லென வீசி வருத்தும், நமன் ஆனான் நல்வேள் இனிய காமனுங் கூற்றுவனானான். (ஆனால்) ஒலிதமிழ் ஓவாது இசைக்கும் திருவொற்றி ஒள்வேலான் இன்னொலி மிக்க தமிழ்மொழியின்கண் ஆக்கப்பட்ட தமிழ் நான்மறைகள் இடையறாமல் ஓதப்படுந் திருவொற்றி நகர்க்கண் எழுந்தருளியிருக்கும் ஒள்ளிய வேற்படையையுடைய முருகனோ, மேவான் - என்பால் அணுகான்; செயல் அறியேன் மேல் - ச்செய்வது அறியேன் என்பது.

திங்கள் நிலவு விரித்தலும், தென்றல் குளிர்ந்து வீசுதலும், வேள்காம வேட்கை எழுப்புதலுந் தனக்குத் துன்பம் பயத்தல் பற்றித் தலைவி அவற்றை இன்னாதனவாக உரைத்தனள். தென்றல், நமன் என்பவற்றில் உம்மை விரித்துக்கொள்க.

தென்றல் தன்னைநோக்கி வீசிவருதல், புலியே சீறிவருதல் போல் அப்போது அவட்குத் தோன்றினமையாற் ‘புலிபோலத் தென்றல் நலியு’ மென்றாள். 'நலிதல்' இங்குப் பிறவினைப் பொருளது; "நடுங்கஞர் நலிய" என்றார். புறப்பொருள் வெண்பாமலையிலும் (12,15).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/182&oldid=1586926" இலிருந்து மீள்விக்கப்பட்டது