உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

  • மறைமலையம் - 20

காதலன் தனக்கருகில் இருக்குங்கால் இன்பம் விளைத்தல்பற்றி ‘நல்வேள்' எனவும், பின் பிரிந்தக்கால் உயிரை வருத்துதல்பற்றி 'நமனானான்' எனவுங் காமவேள் கூறப்பட்டான்.

இயற்கையான மெல்லோசை தமிழ்க்கு உளதாதல் பற்றி 'ஒலி தமிழ்' என விதந்தோதப்பட்டது. 'தமிழென்றது இசைக்கு மென்னுங் குறிப்பால் ஈண்டு நான்மறைகளை உணர்த்தின. நான்மறைகளாவன: மூவர் தேவாரமும் மாணிக்கவாசகர் திருவாசகமுமாம்.

தலைமகள் தன் காதலனைப் பிரிந்து பிரிவாற்றாமற் புலம்பும் பொருள் இதன்கண் வெளிப்படுதல் காண்க.

ஏகல்

15. அருமைசெய் தயர்ப்பத் தலைவி கூறல் “மேலான முத்தே திருவொற்றி மேவிய வேலவனே கோலாகலஞ் செய்து கூடாம லேகல் குறைவுகண்டாய் நூலா வுடைகட்டி யேலாத குன்றினும் நோன்மைமிகுங் கோலா வுயர்குணக் குன்றினுஞ் சென்ற குறிப்பறிந்தே”

-

(14)

இ-ள்). மேலான முத்தே - சிறந்த முத்துப் போன்றவனே, திருவொற்றி மேவிய வேலவனே திருவொற்றி நகரைப் பொருந்திய வேன்முருகனே, கோலாகலம் செய்து கூடாமல் குறைவு கண்டாய் காமவேட்கை மிகுதற்கு உரியனவெல்லாஞ் செய்து பின் அவ்வேட்கை தணிதற்கான கூட்டத்தை நல்காமற் செல்லுதல் நினது அருட்டன்மைக்கு ஓர் இழுக்காகுங்காண், நூலா உடைகட்டி மக்கள் கையால் நூற்கப்படாத ஆடையினை யுடுத்து, ஏலாத குன்றினும் - தனது வன்றன்மையால் நின்மென் றன்மைக்கு இசையாத கன்மலை மேலும், நோன்மைமிகும் - பொறுக்கும் ஆற்றல் மிக்க, கோலா உயர் குணக்குன்றினும் அமைக்கப்படாத உயர்ந்த குணமாகிய மலைமேலும், சென்ற குறிப்பு அறிந்து போய் அமர்ந்த அருட்குறிப்பை அறிந்து வைத்தும் என்க; ஏ அசை.

-

-

ச்செய்யுள், தலைமகன் தன்னைக் காதலித்த தலைவிக்கு எளியனாய் வந்தான்போற் கலவிக்குமுன் செய்வன வெல்லாஞ் செய்து பின் கலத்தலைச் செய்யாது அதற்கு அரியனாகித் தனக்கு மனக்கவற்சியினை விளைவித்த வன்கண்மையினைத் தலைமகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/183&oldid=1586927" இலிருந்து மீள்விக்கப்பட்டது