உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

159

தன் றலைமகற்கு எடுத்துரைக்கும் நிலையில் வைத்துப்

பாடப்பட்டது.

திருவொற்றி நகர் கடலையடுத்துளதாதல் உட்கொண்டு கடலுள் மறைந்துகிடந்த முத்து மக்கட்குப் பயன்படுதற் பொருட்டுக் கரை மேல் வந்தாலென்ன, உலகெங்கும் மறைந்து நிறைந்து நிற்கும் இறைவன், தன்னை வேண்டும் அடியாக்கு அருள் புரிதற் பொருட்டு இந்நகரின்கண்ணே திருவுருக் கொண்டு விளங்கினான் என்பது குறிப்பிப்பார் 'மேலானமுத்தே' என்றார்.

கோலாகலம் - முறைபிறழ்ந்தநிலை; இச்சொல் 'கோலாலம்' எனத் திருவாசகத்தில் வந்தது; “கோலாலமாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த, ஆலாலமுண்டான்” (திருச்சாழல், 8). இஃது ஒலிக்குறிப்பு, வடசொல் அன்று.

'நூலாஉடை' என்பது ஒருவர் கையான் நூற்கப்படாமல் அடியார் பொருட்டுத் தோற்ற மாத்திரையாய்த் தோன்றும் ஆடை; இறைவன் கொண்ட உருவும் அவ்வுருவின்மேற் காணப்படும் ஆடை அணிகலம் முதலியனவுமெல்லாம் அவனருளிற் றோற்ற மாத்திரையேயாய்க் காணப்படும் இயல்பு, "உருவருள் குணங்களோடும் உணர்வருள் உருவிற் றோன்றுங் கருமமும் அருள் அரன்றன் கரசரணாதி சாங்கந்

தருமருள் உபாங்கமெல்லாந் தானருள் தனக்கொன்றின்றி அருளுரு வுயிருக் கென்றே ஆக்கினன் அசிந்த னன்றே'

என்னுஞ் சிவஞான சித்தியார் சுபக்கச்செய்யுளால் (1, 47) உணர்த்தப்படுதல் காண்க. “நூலா உடை' இப்பொருட்டாதல் பதிற்றுப்பத்தில் “நூலாக்கலிங்கம் வாலரைக்கொளீஇ" (12, 21) என்பதனுரையிலுங் காணப்படும்.

கோலல் - வளைத்துச் செய்தல், இஃதிப்பொருட்டாதல், 'நெடுங்காழ்க் கண்டங் கோலி” என்னும் முல்லைப்பாட்டிலுங் (44) காண்க; கையால் வளைத்து அமைக்கப்படுஞ் செய்குன்றின் வேறு பிரித்தற்குக் “கோலா உயர் குணக்குன்று” என்றார்; “குணமென்னுங் குன்றேறி நின்றார்” என்பது திருக்குறள்.

மாயையில் உருவுகொள்ளாமல் அருளில் உருவுகொண்ட இறைவன் மெய்யன்பர் பொருட்டு, மாயையில் உருக்கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/184&oldid=1586928" இலிருந்து மீள்விக்கப்பட்டது