உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

மறைமலையம் - 20

கன்மலை மேலும் எழுந்தருளினானென அவனது அருளிரக்கங் கூறினார். அத்துணை அருளிரக்கமுடைய இறைவன் எளியேன் மேல் இரக்கமிலனாய் தென்னையென்பதாம். (15)

16. அருணிலை யுரைத்தல்

நிலையில்லா இன்பங்களை நிலையினவாக எண்ணி அவற்றின்கட் படிந்து மாந்தர் வீணே கழிகின்றாராகவுந், தமக்குமட்டும் நிலையான இன்பம் ஈதெனத்தெரிவித்துத் தனது திருக்கோலக் காட்சியினையும் நன்கு புலனாக்கியருளிய எல்லாம் வல்ல ஆண்டவனது பேரருணிலையினை அடிகள் வியந்து கனிந்தேத்தும் பொருளியல் இதன்கண்

நுவலப்படுகின்றது.

(1-2) அறிவும் அவாவும் ஒரு வழிச்சென்றாங்கு - அறிவும் அதன் வழி அவாவும் ஒரு நெறியிற் சென்றாற்போற் றோன்றி, ஒருதிறம் இன்றிப் பலதிறம் படும் ஒரு வகையின்றிப் பலவகைப்படுமென்பது.

‘தோன்றி’யென ஒருசொல் வருவித்துரைக்க.

-

-

(3-15) குய் கமழ் கறியும் -தாளிப்பு மணக்குங் கறிகளும், நெய் கமழ் துவையும் - நெய் மணக்குந் துவையலும், பொன்நிறப் புழுக்கலும் பொன்னிறமான பருப்பும், கன்னல் பெய் பாலும் - சர்க்கரைபெய்த ஆவின்பாலும், தன்நிகர் குழம்பும் - தனக்குத் தானே ஒப்பான குழம்பும், பண்ணிய வகையும் வடை இன்னுண்டை இன்னடை முதலான தின்பண்ட வகைகளும், மிக்கெழு சுவையின் முக்கனிவகையும் - மிக்குத் தோன்றுகின்ற சுவையினையுடைய மா, வாழை, பலா என்னும் மூன்று பழவகைகளும், கோழ் அரை வாழைக் குருத்து அகம் விரித்து வழுவழுப்பான அரையினையுடைய வாழையின் குருத்தை உள்விரித்து, பால்கெழு தன்மையின் பலவேறு அமைத்து பரிமாறவேண்டும் முறையிற் பலவேறு வகையாக வைத்து, முரவை போகிய முழு வெள்அரிசி கைவல் மடையன் அடுதலின் கீற்றுகள் அற்ற முரியாத வெள்ளிய அரிசியைக் கைதேர்ந்த சமையற்காரன் சமைத்தலால், நெய் கனிந்து விரல் என நிமிர்ந்த அவையல் மென்பதம் - நெய்கசிந்து விரல்போல் நெடுகிய குற்றலரிசியின் மெல்லிய சோற்றை, முல்லை முகை என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/185&oldid=1586929" இலிருந்து மீள்விக்கப்பட்டது