உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

161

மெல்லிதின் குவைஇ-முல்லை யரும்புகள் என்னும்படி மென்மையாய்க் குவித்து, புழுக்கலம் பிறவும் அளாஅய் முன்னர் இலையிலிட்ட பருப்புங் கறிகள் குழம்புகள் முதலானவுங் கலந்து, விழுத்தக நெய்உடன் பெய்து - மணமுஞ் சுவையுஞ் சிறக்க ஆவின் நெய்யும் உடன்கூட்டி, மெய் மறந்து உண்டாங்கு தன்னை மறந்து உண்டபடியே, ஆனாது உறைவோர் அளவிலர் - பின்னும் மனமமையாமல் வாழ்வோர்

-

அளவில்லாதவராவர்;

L

'பொன்னிறம்' என்பது ஈண்டு மஞ்சள் நிறம்; ஆதலாற் 'பொன்னிறப் புழுக்க' லென்பது பொன்னிறமான துவரம் பருப்பின் புழுக்கல்; புழுங்க வெந்தபருப்புப் புழுங்கல் எனப் பட்டது; “அவரைவான் புழுக்கு” என்றார் பெரும்பாணாற்றுப் படை யிலும் (195). பாலை லையில் தனியே பெய்தல் ஆகாமையிற் கிண்ணத்திற் பெய்து வைத்து காண்க.

-

தின்பண்டங்கள் வட்டம், உருண்டை, தட்டை முதலிய பலவேறு வடிவங்களில் விரல்களை யியக்கிப் பண்ணப்படுதலின் அவை ‘பண்ணிய' மெனப்பட்டன.

அரை, அடிமரம்; கோழரை, பெரியாரை, பொகுட்டரை, முள்ளரையென்னும் நால்வகை மரவகைகளுட் சோழரையும் ஒன்றென்க. கோழரை, வழுவழுப்பான அரை.

'பால்கெழு தன்மையிற் பலவேறு அமைத்து' என்றது, பருப்பு பச்சடி அவியல் பொரியல் வறல் கூட்டு முதலியவைகளை இலையில் வைக்கவேண்டும் முறையிற் பரிமாறுதலை உணர்த்திற்று.

மிக்க

‘முரவை’, அரிசியிற் காணப்படும் வரி; வேக்காட்டினாலுங் காய்ச்சலாலும் அரிசியின்கட் கட்டுவிட்டுக் காட்டும் வரிகளும் 'முரவை' யெனப்படுமென்பாருமுளர்.

‘அவையல்' குற்றலரிசி; “ஆய்தினை யரிசி யவைய லன்ன பொரநராற், 16) என்புழி உரைகாரர் நச்சினார்க்கினியர் ‘அவையல்’ என்பதற்கு இப்பொருளே உரைத்தமை காண்க. பதம், சோறு.

விரலென நிமிர்ந்த சிறுவெண் சோறு முல்லை முகைகளையே முழுதொத்திருத்தலின், ஏனை இலக்கியங்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/186&oldid=1586930" இலிருந்து மீள்விக்கப்பட்டது