உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

மறைமலையம் - 20

அம் முல்லை முகைகளையே சிறப்பாயெடுத்து அதற்கு உவமை காட்டுவவாயின. “முல்லைமுகை சொரிந்தாற்போன் றினிய பாலடிசில்”

(2623), 'முல்லைமோட் டிளமுகையின்........ வெண்சோறு' (2972) எனச் சீவகசிந்தாமணியின் கண் வருதலும் இங்கு நினைவு கூரற்பாலது.

‘விழுத்தக' இன்னும் மேம்பட நெய்யும் உடன்பெய்து என்றவாறு. 'முரவைபோகிய முழுவெள்ளரிசி கைவன் மடையனடுதலின் விரலென நிமிர்ந்த வவையான் மென்பதம் முல்லைமுகையென மெல்லிதிற் குவைஇ' என்னும் பகுதி,

"முரவைபோகிய முரியா வரிசி

விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல்”

என்னும் பொருநராற்றுப்படையடிகளொடு (113-4) பெரும் பான்மையும் ஒத்துநிற்றல் காண்க.

இவ்வகையாக வயிறுபுடைப்ப இனிய இனிய உண்டு அம் மகிழ்வினால் மயங்கிக் கிடப்பதே அறிவின் பயனாமென அதுசெய்து கிடப்பாரும் உலகத்திற் பலரென்க.

இனி, 16-ம் அடி முதல் 53 ம் அடிகாறும் உலகக் காட்சிகளைக் கண்டு அறிவு மாழ்குவார் நிலையை எடுத்துரைக்கு முகத்தால் நானிலக் காட்சிகள் நன்கு விரித்தோதப்படுகின்ன.

(16-22) முகில் தொடுகுடுமியும் - தீண்டுகின்ற முகிலாகிய குடுமியும், முழை கெழு வாயும் பொருந்துகின்ற குகையாகிய வாயும் உடைத்தாய், அருவி என்னும் அறுவையும் உடீஇ அருவிகள் என்னும் உடையும்உடுத்து, அந்திக்காலத்து ஞாயிறொடு பொருது சாய்ங்காலத்திற் கதிரவனொடு போர்செய்து அவ்வாற்றாற் காணப்பட்ட, செவ்வான் என்னும் மெய்கால் குருதியும் - செவ்வானம் என்னும் மெய்பொழியுஞ் செந்நீரும், கணைதொடு புண்ணின் முகுளித்தன்ன பவளமும் - அம்புகள் பட்ட புண்ணினின்றுங் கொப்புளித்தாற்போன்ற பவளங்களும், சிதர்ந்த - சிந்திய, திவள் ஒளி செழூஉம் அரக்கன் அன்ன பொருப்பின் காட்சியும் விளங்கிய ஒளிகள் பொருந்திய அரக்கனை ஒக்கும் மலையின் தோற்றமும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/187&oldid=1586931" இலிருந்து மீள்விக்கப்பட்டது