உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

163

து குறிஞ்சி நிலத்தின் காட்சியை எடுத்து விரித்தோது கின்றது. இதன்கட் குறிஞ்சிநிலத்து மலை ஓர் அரக்கனுக்கு ஒப்பாக வைத்து அழகாகப் புனைந்துரைக்கப் பட்டிருக்கின்றது. மலையுச்சியில் வந்து தவழுங் கருமுகில் அம்மலையென்னும் அரக்கனுக்குக் குஞ்சியாகவும், குகைகளின் சந்து வாயாகவும், அருவி உடையாகவும், செவ்வான் செந்நீராகவும், செந்நீர்க் குமிழி பவளமாகவும் எடுத்துக்காட்டிய அழகு பெரிதும் உணர்ந்து மகிழற்பாலதாகும். பெரிய தோற்றமுங் கரிய நிறமுடையதாய் முட்செடிகளுங் கற்பாறைகளும் மலிந்து தோன்றுதலின், மலை அரக்கனுக்கு நிகராயிற்று. மலை அரக்கனோடு ஒப்பவைத் துரைக்கப் பட்டமையின் அதற்கேற்பப் போர்நிகழ்ச்சியும் பொருத்தமாய் எடுத்துக்காட்டிய நுட்பங் குறித்துணர்க.

இடையே சிலசொற்கள் வருவித்துக்கொள்க. செவ்வான் என்னுங் குருதி யென்பது. குருதியும் பவளமுஞ் 'சிதர்ந்த வென்பதன் வினைமுதல்வன். ஒளிகெழூஉம் பொருப்பின் காட்சியெனக் கூட்டுக. ‘அறுவை”, உடை; “காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇ” என்பது சிறுபாணாற்றுப்படை (236) காலல், பொழிதல்.

-

(23-31) மடமான் பிணைகள் கன்றொடுகுழீஇக் கான்யாற்று ஒண்புனல் நிரைநிரை அருந்த - மென்றன்மை வாய்ந்த பெண் மான்கள் தத்தங் கன்றுகளுடன் கூடிக்கொண்டு காட்டாற்றின் கண் உள்ள விளக்கம் மிக்க தண்ணீரை வரிசை வரிசையாய் நின்று பருகவும், கானம்கோழிதுணை கூப்பெயர்ந்து ஞாயிறு தோன்றும் காலை அறிவிப்ப காட்டுக்கோழிகள் வைகறையில் எழுந்து தத்தம் பெடையினங்களைக் கூவி அழைக்குமுகத்தால் ஞாயிறு தோன்றும் விடியற் காலத்தினை மக்கட்குத் தெரியப்படுத்தவும், நிறம் கெழு தாரா குறும்கயம் மருங்கில் குறுகுறு நடந்தது நீந்த - நிறம் பொருந்திய தாரா என்னும் நீர்ப்பறவை சிறிய குட்டையின் அருகிற் குறுகுறுவென நடந்து நீரிற் பாய்ந்து நீந்தவும், வெறிபடுதளவம் அரும்பி எயிறு என விளங்க மணம் வீசும் முல்லை மொட்டுகள் அரும்பி வெண்பல் என விளங்குதலானும், கொன்றை பொன்வீஉகுப்ப-கொன்றை மரங்கள் பொன்னிறமான மலர்களை உதிர்த்தலானும், மன்றல் காவதம் கமழும் காடுகெழு காட்சியும் காவதத் தொலைவு நறுமணங் கமழுங் காட்டின்கட்பொருந்திய தோற்றமும்;

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/188&oldid=1586932" இலிருந்து மீள்விக்கப்பட்டது