உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

மறைமலையம் - 20

காட்சி

இப் பகுதியின்கண் முல்லை நிலத்தின் விரித்துரைக்கப்படுதலின் அந் நிலத்திற்கு உரிய மான்பேடுங் கான்யாறுங் கானங் கோழியுந் தாராவுந் தளவமுங் கொன்றையு முதலான கருப்பொருள்கள் இனிதெடுத்துக் காட்டப்பட்டன.

மடம் - மென்றன்மை; “தெறிநடை மடப்பிணை” (புறம், 23) என்பதன் உரையிற் காண்க. கவரிமா, மான் முதலிய கான்விலங்குகளின் பெண்ணினங்கள் 'பிணை' எனப்படும். இப்பொருண் மரபின் உண்மை.

“புல்வாய் நவ்வி யுழையே கவரி

சொல்வாய் நாடிற் பிணையெனப் படுமே"

என்னுந் தொல்காப்பியர் மரபியல் நூற்பாவால் (57) இனி துணரப்படும்.

தெளிந்த நீர் இங்கு 'ஒண்புனல்' எனப்பட்டது.

'துணைகூப்பெயர்ந்து' என்பது முதற்பாட்டினும் (10)

வந்தமை காண்க.

'குறுங் கயம்' சிறிய குளம்; ஆவது குட்டையென்க.

அருந்த, அறிவிப்ப, நீந்த என்னும் வினையெச்சங்கள் கொண்டு முடியுந் தோன்றும்' என்னும் ஒருசொல் வருவிக்க. 'விளங்க', ‘உகுப்ப’ வென்னும் வினையெச்சங்கள் காரணப்

பொருளன.

'காவதம்' என்பது எண்ணாயிர முழத்தொலைவு; ஆவது இரண்டேகாற் கல்லும் எண்பது முழங்களுமென்க. இச் சொல் இவ் அளவினையே குறிக்குமென்பது, அடிகளே தாம் அரிதின் ஆராய்ந்து எழுதிய மாணிக்க வாசகர் வரலாறுங் காலமும் என்னும் உரைநடை நூலில் (பக்கம், 570.) மிகவிரிவாக ஆராய்ந்து விளக்கப்பட்டிருத்தல் காண்க.

-

(32-38) கொழுவளை ஈன்ற செழுநீர் முத்தம் செந் தாமரையின் மிளிர்வன கொழுவிய வலம்புரிச் சங்குகள் ஈன்ற செழுநீர்மை வாய்ந்த முத்துகள் செந்தாமரை மலர்களின்மேல் விளங்குவனவான தோற்றம், மங்கையர் திருமுகம் குறுவியர் பொடித்தல் - மான -மங்கைப் பருவத்துப் பெண்களின் அழகிய முகங்கள் சிறுசிறு வியர்வைத் துளிகள் அரும்புதலை ஒப்பவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/189&oldid=1586933" இலிருந்து மீள்விக்கப்பட்டது