உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால்

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

165

குடம்புரை செருத்தல் தடங்கண் மேதி - நீரின்கட் படிந்துள்ள குடம் ஒக்கும் மடியையும் அகன்ற கண்களையும் உடை ய எருமைகள், இல்உறை குழக்கன்று உள்ளு தொறும் ஒழுகும் தீம் வீட்டில் உறையுந் தம் ளங்கன்றுகளை நினைக்குந்தோறும் அவற்றின் மடிகளிலிருந்து சுரந்தொழுகுந் தித்திப்பான பாலை, மாந்தி பருகி, பருவரால் உகள - பரிய வரால்மீன்கள் புரளவும், மலிபூம் பொய்கை மருதக் காட்சியும் - வ்வகையான அழகுகள் மலிந்த மலர்ப் பொய்கைகள் ஆங்காங்கு விளங்கும் மருதநிலத் தோற்றமும்;

-

நீர், நீர்மை; இயல்பென்னும் பொருட்டு; 'மிளிர்வன’ வானதோற்றம் என ஒருசொல் வருவித்துரைக்க; மிளிர்வன வினையாலணையும் பெயர்; பொடித்தல், அரும்புதல்.

‘செருத்தல்',எருமை, ஆன் என்பவற்றின் மடியை உணர்த்தி வரும். 'குடம்புரை செருத்தற் செருத்தற் குவளைமேய் கயவாய்க் குவிமுலைப் படர் L மருப் பெருமை" என்றார் சீவக சிந்தாமணியிலும் (2102).

இங்குக் கூறப்படும் மருதநிலக் காட்சி மிக அழகிது.

(39-52) தேற்றாப் புலவர் நூல் திறம்கடுப்ப தெளிவடையாத புலவரது நூலி னியல்பை ஒப்ப, எழுவாய் ஓங்கி முறைமுறை தேய்ந்து கரைசார்ந்து அவியும் திரையே எழுமிடத்திற் பெரிதாய்ப் பின் வரவரக் குறைந்து சிறிதாகிக் கரைசேர்ந்து அழியும் அலையும், கரை தொடுத்து மறுகரை காணாது அகன்று நனி ஆழ்ந்து ஒருகரை தொடங்கிமறுகரை - காணவொட்டாமல் அத்துணைப் பரந்து மிகவும் ஆழமுடைத் தாய், நல்லிசைப் புலவர் செய்யுள் போல- மறுவற்ற நல்ல புகழையுடைய புலவரது செய்யுளைப் போல், பல்பொருள் செறித்த கடலே - முத்து சங்கு முதலான பல அரிய பண்டங்கள் நிரம்பிய கடலும், பொல்லா ஒழுக்கம் தலைவந்த பழிப்புடை யாளரும் தீயவொழுக்கத்தில் முன்வந்த பழிப்பினையுடைய தீயோரும், விழுக்குணம் மேவுவரென்பது நலத்தக - சிறந்த நல்லியல்பினை உடையராவர் யராவர் என்னும் உண்டை உண்மை நன்கு பொருந்தும்படி, முள் உடைக் குழையிடைக் கொள்ளைமணம் அவிழ்த்து வாலிதின் விரிந்த கைதை அம்கழியே - நுனியிலும் ஓரங்களிலும் முட்கள் உடைய பசிய மடல்களினிடையில் மிக்க

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/190&oldid=1586934" இலிருந்து மீள்விக்கப்பட்டது