உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

மறைமலையம் 20

மணம் பரப்பி வெள்ளிதாய் அலர்ந்த தாழம்பூவினையுடைய ய கழியும், மின் சிதர்ந்து அன்ன பொன் சிதர் பரப்பி - மின்னொளி சிதறினாற்போலப் பொன்னிற மான பூந்தாதுகளை எங்குஞ் சிந்தி, எரி கிளர்ந்தன்ன விரிபூஞாழல் பொழிலே தீப் பிழம்பு ஒளிர்ந்தாற்போல இதழ்விரிந்த பூக்களையுடைய ஞாழன்மரங்கள் நிரம்பிய சோலைகளும், எனும் இவை எழில்பெறத் தோன்றும் நெய்தல் காட்சியும்;

6

-

நெய்தல் நிலமென்பது கடலுங் கடல்சார்ந்த இடமுமாகும்; அந்நிலத்துக் காட்சி இப் பகுதியின்கண் இனி இனிதெடுத்துக் காட்டப்படுகின்றது.

இனி

ன்

அரைகுறையாகக் கற்றுத் தெளிவெய்தாத புலவர் ஈண்டுத் ‘தேற்றாப் புலவர்' எனப்பட்டார். அவரியற்றும் நூல்களெல்லாந் தொடக்கத்தில் மட்டும் ஆங்கு வேண்டும் பொருட் பரப்பெல்லாந் தேடிக்கொணர்ந்து உரியசொற்களுடன் தடக்கி அமைத்து எழுச்சியாய் இயற்றப்பட்டுப், பின் வரவர அவ்வெழுச்சியும் அவ்வெழுச்சியின் வழிக் கிளர்ந்துவருஞ் சொற்பொருட் பரப்புமெல்லாம் முறைமுறையே சுருங்கி அவை முடிய வேண்டும் வரம்புக்கு வரு முன்னரே இற்றுப்போம். புலவன் நூலின்கட் செய்யுங் குற்றங்கள் பத்தனுள் இதுவும் ஒன்று; இது 'சென்றுதேய்ந் திறுதல்' என்னுங் குற்றமாம்; இங்ஙனமே கடலின்கண் உண்டாகும் அலைகள் முதலில் மிக உயரமாய்க் கிளம்பி வரவரத் தேய்ந்து அவிந்துபோதல் காண்க.

எழுவாய், எழுகின்ற இடம்; ஆவது தொடக்கமென்க.

நல்லிசைப் புலவர்கள் இயற்றுஞ் செய்யுட்களெல்லாம் நூல்நுட்பங்களால் மிக ஆன்றும் மிக ஆழ்ந்தும் அரும்பெருங் கருத்துக்கள் நிரம்பிக் கிடக்குமாகலின் அங்ஙனமே கரைகாணாது அகன்று நனி ஆழ்ந்து பல்பொருள் செறித்த கடலுக்கு அவை ஒப்பாயின.

‘செறித்த கடல்' அடக்கிய கடல் என்க.

“செறுத்த செய்யுட் செய்செந் நாவின்

வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்

என்னும் புறநானூற்றின் (53) கண்இச்சொல் இப் பொருட்டாதல்

காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/191&oldid=1586935" இலிருந்து மீள்விக்கப்பட்டது