உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

167

ஒழுக்கம் என்பதற்கு ஏழாவது விரித்துரைக்க; ‘தக’, தகும்படி; நலத்தக, நன்கு பொருந்தும்படி; ஒரு சொல். குழை, இங்குப் பசிய இலை; கொள்ளைமணம் கூட்டுமணம்; அதாவது 'மிக்கமணம்' என்பது; 'வால்', வெண்மை, மடற்றாழை” (118) என்பது பட்டினப்பாலை.

-

66

வாலிணர்

ஞாழல்', மிகுந்த மஞ்சட் பூம்பொடிகளும் சிவந்த இதழ்களும் உடைய வட்டமான பூக்கள் நிரம்பிய ஒருவகையான பரியமரம்; இது புன்னைமரத்துக்கு இனமான நெய்தல்நிலத்து மரம்; “பொன் இணர் ஞாழல் முனையிற் பொதியவிழ் புன்னையம் பூஞ்சினை சேக்குந் துறைவன்” என்னும் ஐங்குறு நூற்றுச்செய்யுளால் அஃதுணர்க (169).

6

திரையே கடலே கழியே பொழிலே

ஏகாரங்களெல்லாம் எண்ணுப்பொருளன.

-

என்னும்

(52-53) கண்டு ஆன இந் நானிலக் காட்சிகளையும் பார்த்து, மெய் என அறிவுமாழாந்து - அவையே தங்கட்புலனாற் காண்டற்குரிய மெய்க்காட்சியாம் போலுமென அறிவுமயங்கி, வாழ்வோரும் பலர் - கவலையின்றி வாழ்கின்றவர்களும் உலகத்திற் பலராவர்.

மாழாத்தல், மயங்குதல்;

பொருப்பின் காட்சியும் (22), காடுகெழு காட்சியும் (31) மருதக்காட்சியும் (38) நெய்தற்காட்சியும் கண்டு (52) வாழ்வோரும் பல (53) ரென்க.

-

(54-65) காண்தகு சிறப்பின் பாண்டின்மேல் காண்டற்குரிய சிறப்பினையுடைய அழகிய கட்டிலின்மேல், ஐவகை அமளியும் கூறுபட அமைத்து - ஐந்துவகையான படுக்கைகளையும் வகைபட விரித்து, கால்களைந்து ஆய்ந்த வான் முகை முல்லை கடிமணம் கமழத்தூஉய் காம்புகள் கிள்ளி ஆராய்ந்து எடுத்த சிறந்த முல்லைப்போதுகளை அவற்றின்மேல் மிக்க மணம் வீசத்தூவி, மடிபடு நுரை முகந்தன்ன தூவெள் அறுவை செறிவுற விரித்து - மடிக்கப்பட்டுப் பால் நுரையினை ஏந்தினாலொத்த அழுக்கற்ற வெள்ளிய உடையினை அதன் மேல் நெருங்கிப் பொருந்தும்படி விரித்து, நறும்குறடு உரைத்தகேழ்கிளர் தேய்வையில் கோழ் அகில் நெய்யும் புழுகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/192&oldid=1586936" இலிருந்து மீள்விக்கப்பட்டது