உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

❖ - மறைமலையம் - 20

மான்மதமும் செழும் கருப்புரமும் கொழும் பனிநீரும் வழுவறக்கூட்டி - நல்ல சந்தனக் கட்டையினால் தேய்த்தெடுத்த நிறம் விளங்குங் குழம்பில் வழுவழுப்பான அகிற்கட்டையின் நெய்யும் புழுகுங் கத்தூரியும் செழுமையான பச்சைக் கருப்புரமும் கொழுமையான பனிநீரும் அளவு பிழையாதபடி கலந்து, வேரியின் அமைந்த சிவிறியில் தோய்த்து வெட் வட்டி வேரினால் அமைக்கப்பட்ட சிவிறிகளில் தோய்ந்து, நிரைநிரை மங்கையர் முறைமுறை இரட்ட - வரிசைவரிசையாக மங்கைப் பருவத்து இளம்பெண்கள் கட்டிலருகில் நின்று முறைமுறையே விசிற, உறங்கும் வாழ்க்கையில் பிறங்குவோர் பலர் - அதன்மேல் மெல்லெனப் படுத்து உறங்கும் வாழ்க்கையில் மேம்படுவோர் பலராவர்;

'காண்டகு சிறப்' பென்பது, அழகு; அதாவது கட்டிலிற் பொருத்திய யானைமருப்பிற் செதுக்கப்பட்டிருக்கும் ஓவிய அழகும், துணிகளானும் மணிகள் முதலியவற்றானும் புனைவுசெய்யப்பட்டிருக்கும் ஒப்பனையழகு மென்க.

'பாண்டில்' கட்டில்; மேலால் என்பதில் ஆல் அசை,

L

ஐவகை அமளியாவன, சிறுபூளைப் பஞ்சினாலான மெத்தை யும், செம்பஞ்சினாலான மெத்தையும், வெண்பஞ்சினா லான மெத்தையும், மகளிர் மென் கூந்தலாலான மெத்தையும், அன்னச்சேவலின் மென்மயிரினாலான மெத்தையுமென்ப; இது “சிறுபூளை செம்பஞ்சு வெண்பஞ்சு சேண, சேண, முறு தூவி சேக்கையோ ரைந்து” (நச்சினார்க்கினியருரை மேற்கொள், நெடுநல், என்பதனானும் அறியப்படும்.

133.)

இவ்வைவகையமளியும்,

“மயிர்ச்சேணம் பஞ்சுமெத்தை வண்படாந் தூவி பயிற்றுந்தண் வீப்பாய் பஞ்சசயனம்”

எனப் பிங்கலந்தையில் (383) வேறுவகையாகக் கூறப்படுகின்றன. எனினும் செய்யுளில் மலர்ப்பாயலும் வண்படாமும் ஐவகை யமளியின் வேறாய் வைத்துரைக்கப் பட்டிருத்தலின், அடிகள் கருதிய ஐவகையமளி முன்னதேயாதல் வேண்டுமென்பது. வீப்பாய் - மலர்ப்பாய்; வண்படாம் - துணிமடி; கட்டிற்கு உரிய காண்டகு சிறப்பு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/193&oldid=1586937" இலிருந்து மீள்விக்கப்பட்டது