உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

“பொருதொழி நாக மொழியெயிறருகெறிந்து

169

சீருஞ் செம்மையு மொப்ப வல்லோன்

கூருளிக் குயின்ற வீரிலை யிடையிடுபு தூங்கியன் மகளிர் வீங்குமுலை கடுப்பப் புடைதிரண் டிருந்த குடத்த விடைதிரண் டுள்ளி நோன்முதல் பொருத்தி யடியமைத்துப் பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டில் மடைமா ணுண்ணிழை பொலியத் தொடைமாண்டு முத்துடைச் சாலேக நாற்றிக் குத்துறுத்துப் புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்

தகடுகண் புதையக் கொளீஇத் துகள்தீர்ந்து”

என்னும் பகுதியானும், அக்கட்டிலின்மேல் விரிக்கப்படும்

அமளிகளினியல்பு.

66

‘ஊட்டுறு பன்மயிர் விரைஇ வயமான் வேட்டம் பொறித்து வியன்கட் கானத்து

முல்லைப் பல்போ துறழப் பூநிரைத்து மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத் துணைபு ணரன்னத் தூநிறத்தூவி

யிணையணை மேம்படப் பாயணை யிட்டுக்

காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்

தோடமை தூமடி விரித்த சேக்கை'

وو

என்னும் பகுதியானும் நெடுநல்வாடையின்கண் (117-135) விளக்கப்பட்டிருத்தல் இங்கு நினைவுகூரற்பாலது.

66

'கால் களைதல்' காம்பு கிள்ளுதல்; இஃதிப்பொருட்டாதல் “அனிச்சப்பூக் கால் களையாள் பெய்தாள்” (திருக்குறள், 1115). என்பதனால் அறியப்படும்.

வெண்மைக்குந் தூய்மைக்கும் மென்மைக்கும் அறுவைக்கு நுரை உவமையாம். “நுரையென விரிந்த நுண்பூங் கலிங்கம்” (சிலப்பதி, 22:21) “தீம்பா னுரைபோற் றிகழ்வெண்பட்டுடுத்து”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/194&oldid=1586938" இலிருந்து மீள்விக்கப்பட்டது