உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

  • மறைமலையம் - 20

(சிந்தாமணி, 3046) எனச் சான்றோ ரிலக்கியங்களிலும் இவ்வுவமை வரும். செறிவுற, இணைவுற

‘நறுங்குற டுரைத்த கேழ்கிளர் தேய்வை' என்பதற்கு ஈங்குரைத்த பொருள் “நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை” யென்னுந் திருமுருகாற்றுப்படையடி (33) யுரையிலுங் காண்க. 'கோழ்' வழுவழுப்புப் பொருட்டாதல், 'கோழரை’ என்பதனால் அறிக.

கருப்புரத்துக்குச் செழுமையும், பனிநீருக்குக் கொழுமையு மாவது மணச்செழுமையாம்; செழுமை கொழுமை யென்பன ஒருபொருட் கிளவிகள்.

சிவிறியைத் தோய்த்தெனற்பாலது சிவிறியிற் றோய்த்தென வந்தது உருபு மயக்கம்.

இரட்டல், விசிறல். 'பிறங்குத’ லென்பது ஈண்டு மேன்மேலும் உயர்தலென்னும் பொருட்டு.

(66

-

-

6

75) தம் நலம் பகரும் பொன் விலைமாதர் பொருடருவாரி யாவராயினும் அவர்க்குத் தமது இன்பத்தை லைகூறும் அழகிய பொருட்பெண்டிர், திவவு யாழ் எழீஇ நரம்பினது வார்க்கட்டினை யுடைய யாழோசையை எழுவித்து, நவை நான்கு அகற்றி குற்றங்கள் நான்கையும் நீக்கி, மிடற்று எழும் ஓசையும் நரம்பு இமிர் ஒலியும் ஒரு நெறிச்சென்று ஆங்கு ஒருநிலை நிகழ தொண்டையிலிருந்து தோன்றுகின்ற குரலோசையும் நரம்பிலிருந்து ஒலிக்கின்ற யாழோசையும் ஒருவழியே சென்று இரண்டற்ற அவ்விடத்தில் ஒருதன்மைப் பட்டு நிகழ, புள்இனம் துணைமறந்து ஒதுங்க அவ்வினிய

-

-

சயைக் கேட்டுப் பறவைக் கூட்டங்கள் தத்தம் பெடையினங்களை மறந்து ஒருபக்கத்தே ஒதுங்கி உருகிநிற்பவும், வளவிய வள்ளியகுழைமுகம் தோன்றி வறுமரம் உயிர்ப்ப தளிர்முனைகள் தோன்றி வற்றல் மரங்களெல்லாந் தளிர்ப்பவும், விழுமிதின் எழூஉம் மிடற்றின் பாடலும் இனிமையாய் எழுகின்ற குரற்பாட்டும், கொன்றை அம் குழலும் கொன்றைக் காயினால் ஆன ஊதுகுழலும், குன்று அமர்வேயும்

-

-

-

குன்றத்தின்கண் இருக்கின்ற மூங்கிலால் ஆன வேய்ங்குழலும், துருவி ஊதும் பொருவில் ஓசையும் துளைத்தூதுகின்ற

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/195&oldid=1586939" இலிருந்து மீள்விக்கப்பட்டது