உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

171

ஒப்பில்லா இன்னிசை யொலியும், செவ்வாய் மாந்திச் சிறந்தோரும் பலர் - செவியே வாயாய்ப் பருகி மகிழ் சிறந்தோரும் பலராவர்;

நலம், இன்பம்; 'திவவு' என்பது “நரம்புகளை வலிபெறக் கட்டும் வார்க்கட்டு” (சிறுபாணாற்றுப்படையுரை, 222). ‘திவவுயாழ்' என்பன “முற்றுமற்றொரோவழி” (நன்னூல், 164). என்பதனால் 'திவவியாழ்' எனப்புணர்ந்தது. "திவவியாழ் மிழற்றி” யெனச் சான்றோரிலக்கியங்களில் வருதலுங் காண்க.

நவை நான்காவன: “வெயிலுங் காற்றும் நீரும் நிழலும் மிகுதல்” என்பர் நச்சினார்க்கினியர் (சீவகசிந்தாமணி, 720) இவையாழுக்கு ஆகா.

குரலோசையும் யாழோசையும் வேறுவேறு நெறிப்பட்டுப் பிரிந்துசெல்லாமல் ஒரு நெறிப்பட்டு ஓ ரோசைபோல் நிகழ்தலின், ‘மிடற்றெழு மோசையும் நிரம்பிமிரொலியும் ஒரு நெறிச் சென்றாங்கு ஒரு நிலை நிகழ' வெனப்பட்டது. துணையோசைக ளெல்லாங் குரலோசையோடு இணைந்து

ணங்கி நிற்றலே இசையினிமைக்குச் இவ்வியல்பினை ஆசிரியர் இளங்கோவடிகளும்,

“குழல்வழி நின்ற தியாழே யாழ்வழித் தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப்

பின்வழி நின்றது முழவே முழவொடு

கூடிநின் றிசைத்த தாமந் திரிகை

யாமந் திரிகையோ டந்தர மின்றி”

என்று மிகவும் அழகாய் எடுத்துக் காட்டினர்.

சிறப்பாம்.

(சிலப், 3: 139 - 143).

அரிய இன்னிசையைக் கேட்டலாற் புள்ளினங்கள் உணர்வொழிதல் முதலான உண்மைகள்.

66

'ஊடுசெவி யிசைநிறைந்த வுள்ளமொடு புள்ளினமு

மாடுபடிந் துணர்வொழிய”

என்பது முதலான பெரியபுராணப்பாட்டுகளானும் (ஆனாய, 31) உணரப்படும்.

‘அமர்தல்’, ஈண்டு இருத்தலென்னும் பொருட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/196&oldid=1586940" இலிருந்து மீள்விக்கப்பட்டது