உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

மறைமலையம் - 20

'துருவி ஊதுதல்' ஓசை உள்விராய்ப் பாய்ந்தொழுமாறு துளைத்தூதுதலென்க.

-

(76-83) பித்திகைக் கொழுநனை பிச்சிச்செடியின் காழுவிய மொட்டுகளும், முத்துஆர் முல்லை - முத்துக்களைப் போல் நிறைந்த முல்லையரும்புகளும், நறுவிரைத் தாமரை - னிய மணங் கமழுஞ் செந்தாமரை முகைகளும், துவர்க்கால் வகுளம் - சிவந்த காம்புகளையுடைய மகிழம்பூக்களும்; சண்பகம் குவளை பொன்மடல் தாழை -சண்பக மலர்களுங் குவளைப் போதுகளுஞ் செம்பொன்போலுஞ் சிவந்த மடல்களையுடைய செந்தாழம் பூக்களும், கொழுந்தும் மருவும் - மருக்கொழுந்தும் - மருவும், செழும் தண்வேரியும் செழுமையான குளிர்ந்த வெட்டிவேரும், தொடலை ஆக்கியும் என இவற்றை மாலையாகத் தொடுத்து அணிந்தும், விடுபூச்சிதறியும் விடுபூக்களாகத் தூவியும், செண்டும் பந்தும் கொண்டு விளையாடியும் - மலர்ச்செண்டுகளாகவும் பந்துகளாகவுங் கட்டிக் கைக்கொண்டு விளையாட்டயர்ந்தும், நறும் பொருள் விராஅய் மெய்யில் திமிர்ந்தும் - மணப்பண்டங்களை ஒருங்கு குழைத்து உடம்பிற் பூசியும் மகிழ்ந்து, வறிதின் வாழும் மக்களும் பலர் வீணாய் வாழ்நாள் கழிக்கும் மக்களும் பலராவர்;

-

-

-

‘பித்திகை' யென்பது பிச்சி அல்லது சாதிமல்லிகை. வகுளம், மகிழ்; பொன் என்னுங் குறிப்பால் தாழை செந்தாழை எனப்பட்டது. மேலும் வெண்டாழையினுஞ் செந்தாழையே மணமிக்க தாதலுங் காண்க. மருக்கொழுந்தும் மருவும் வேறு வேறாதல் விளங்கக் 'கொழுந்தும் மருவும்' என்றார்; கொழுந்து மருக்கொழுந்தின் தலைக்குறை.

66

தாடலை' தொழிலடியாகப் பிறந்தபெயர்; தொடுக்கப் பட்டது தொடலை; ஐ செயப்படுபொருள் விகுதி. இச்சொல் மாலையென்னும் பொருட்டாதல் தாடலைக்குற்ற சிலபூவினரே" (நெய்தற் பத்து, 7) என்னும் ஐங்குறுநூற்றடியானுந் தெளியப்படும்.

‘வறிதின்' என்றமையின், வாழும் என்பது வாழ்நாள் கழித்தலையே உணர்த்து மென்பது.

(84-87) ஐம்பொறி வழிச்சென்று இம்பரில் நுகரும் மெய்வாய் கண் மூக்குச் செவி யென்னும் ஐந்து பொறிகளின்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/197&oldid=1586941" இலிருந்து மீள்விக்கப்பட்டது