உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

-

173

வழியாகவும் உள்ளம் பாய்ந்து இவ்வுலகத்தின்கண் நுகருகின்ற, ஐவகைச்சுவையும் ஊறு சுவை ஒளி நாற்றம் ஓசையென்னும் ஐந்து சுவைகளையும், ஒருகால் காட்டும் மைவிழிமடவார் பொய்படும் இன்பத்து ஒரே நேரத்தில் தம்பாற் புலனாகக் காட்டும் மையணிந்த விழிகளையுடைய பெண்மக்களது நிலையுதல் இல்லாத சிற்றின்பத்தின்கட் படிந்து, மெய்படத் துளங்கும் விழலரும் பலர் - அதனை நிலையுதலுடையதாகக் கருதி உடலும் உயிரும் நிலைகலங்கும் வீணரும் பலராவர்;

ஐவகைச் சுவையும் மடவார் மாட்டு ஒருகாற் றோன்று மென்னும் உண்மை,

“கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு

மொண்டொடி கண்ணே யுள

என்னுந் திருவள்ளுவர் பொன்மொழிக்கு (புணர்ச்சி மகிழ்தல், 1) உரைகாரர் பரிமேலழகர், "வேறு வேறு காலங்களில் வேறுவேறு பொருள்களான் அனுபவிக்கப்படுவன ஒருகாலத்து இவள் கண்ணே அனுபவிக்கப்பட்டதாம்” என்று மிகத் தெளிவாய்ப் பொருளுரைத்தமை கொண்டு தெளியப்படும்.

'பொய்படு மின்பத்து' என்புழிப் 'பொய்' யென்பது 'நிலையுதலின்மை' என்னும் பொருட்டாம்; மற்றிதற்கு ஒருசாரார் ‘பாழ்' எனப் பொருளுரைப்பர்; உலகவியற்கைகளில் முதலற இல்லாமலொழிதலாகிய பாழாந் தன்மை யாண்டும்

66

ன்மையின், அப்பொருள் சிறிதும் பொருந்தாது என்க.

‘துளங்குதல்’ இங்கு நிலைகலங்குதல் என்னும்பொருட்டு; 'கடிமரந் துளங்கிய காவும்” (புறநானூறு, 23: 9). என்புழியும் அதன் உரைகாரர் இங்ஙனமே பொருளுரைத்தார்; சிற்றின்பத் தின்கண் மிகப் படிந்தார்க்கு உடல்வலிகுன்ற, அதன்வழியே உயிர்வலியுங் குன்றுதலின் ‘துளங்க' என்றார்.

விழற்பூடு

எத்துணைதான்

மிகச்செழுமையாய் உயர்ந்தோங்கி அடர்ந்து வளர்ந்தாலும், இறுதியில் அஃது ஏதுங் கதிர்சாய்த்து மக்கட்குப் பயன்படுத லில்லாமையால் அதன் செழுமை வீணாவதேயாகும். ஆதலால் மக்களிலும் அங்ஙனம் ஏதும் பயன்படுதலில்லாதார்க்கு ஆன்றோர் அதனை உவமை உருவங்களாகக் கொண்டுரைப்பது மரபு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/198&oldid=1586942" இலிருந்து மீள்விக்கப்பட்டது