உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

L

மறைமலையம் - 20

-

-

(88-93) தாமும் துவ்வாது பிறர்க்கும் ஈயாது - தாமும் நுகராமற் பிறர்க்குங் கொடாமல், வெருவரு பேய்என உரவோர் இகழ அஞ்சுதற்குரிய பேய்உருவமேயென அறிஞர்கள் இகழ்தலைச்செய்ய, ஆனாது அரும்பொருள் இவறிக்கூட்டி மேன்மேலும் மனமமையாமற் கிடைத்தற் கருமையான செல்வப்பொருளை எவர்க்குங் கொடாமல் மேன்மேற் சேர்த்து, மாணா வாழ்க்கை மக்களும் கள்வரும் கவர்ந்து செல்ல மாட்சிமைப்படாத தீயவாழ்க்கையினையுடைய தம் புதல்வர்களுந் திருடர்களும் அப்பெரும்பொருளை ள உரிமையாகவுங் காள்ளைகொண்டுஞ் செல்ல, நிமிர்ந்து வான்நோக்கிச் செய்வது அறியாக் கையரும் பலர் அம்முகத்தாற் பொருளிழந்து போனமையின் அண்ணாந்து வானத்தைப் பார்த்து இனி இன்னதுதான் செய்வது என்பது அறியமாட்டாத பயனில் செயலுடையாரும் பலராவர்.

66

-

'துவ்வல்', நுகர்தல்; இச்சொற்கு இப்பொருளுண்மை "துறந்தார்க்கும்” என்னுந் திருக்குறளிற் (42) காண்க.

மிகவும் அரும்பாடுபட்டு

மேன்மேலும்

ஈட்டிய பொருளை பெருகச்செய்தல்வேண்டு மென்னும் பேராவலினாற் றாஞ் செவ்வையாய் நுகராமையினாலும், துறந்தார், கற்றார், வறியார்க்கு அவருளம் உவப்ப ஈயாமையினாலும், வீணே பொருள் தொகுத்தாரது நிலை, உடம்பிளைத்து என்புதோன்றிச் சதையுலர்ந்து கன்னம் வற்றி, உதடுவெளுத்து நாச்செத்துக் கண்குழிந்த பேய் தான்கைக் கொண்ட புதையலைத் தானும் பயன்படுத்தாமற் பிறர்க்குங் காடாமற் காத்துநிற்கும் நிலையோடு ஒப்பதாகவைத்து, வெருவருபேய்' என அறிஞர் இகழ்தலைச் செய்வரென்க. அவர் அறிஞரின் இகழ்ச்சிக்குரிய

ராவரென்றற்கு

உரவோர்மேல்வைத்து ‘உரவோர் இகழ' வெனப் பட்டது; அறிவிலார் ஈயாச்செல்வரையும் ஏத்திப் புகழ்வராயினும், அறிவுடையார் பிசினரைப் புகழாது இகழ்தலே செய்வர்; அறிஞராற் பாராட்டப்படாத அவர் நடைப்பிணமேயாவ ரென்பது குறிப்பித்தாராயிற்று.

நல்லார் கைப்படின் இன்பமும் அறமும் அவற்றால் மறுமைநலமும் அளித்தற்குரியதாகலிற் செல்வம் அரும் பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/199&oldid=1586943" இலிருந்து மீள்விக்கப்பட்டது