உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

-

175

எனப்பட்டது. இவறல் "வேண்டும்வழிப் பொருள் கொடாமை என்றார் பரிமேலழகியார் (திருக்குறள், 432).

""

மாணா வாழ்க்கை யென்பது நல்லியல்பினால் மாட்சிமைப்படாத தீய வியல்பினையுடைய வாழ்க்கையென்க: இதனை மக்களுக்குங் கள்வருக்குங் கொள்க.

நினைவு மயக்கமுடையா ரெல்லாரும் நிமிர்ந்து வான் நோக்குதல் இயல்பாகலின், இங்குப் பொருளிழந்த வருத்தம் ஒருபக்கமும், இனிச் செய்வதொன்றுந் தோன்றாத நினைவுக் குழப்ப மொருபக்கமுமிகுந்து தலைமயங்குதலின் இவரும் நிமிர்ந்து வான்நோக்குவாராயினர்.

கையார் - கீழ்மக்கள் (திவாகரம்).

“பொருளானா மெல்லா மென் றீயா திவறு

மருளானா மாணப் பிறப்பு”

என்னுந் திருக்குறள் பொன்மொழியும், அதற்குப் பரிமேலழகர்

"பிறர்க்கீயாது

பற்றுள்ளஞ்

சய்யும்

மயக்கத்தாலே ஒருவனுக்கு நிறைதலில்லாத பேய்ப்பிறப் புண்டாம்” என்னும் நுண்ணரை மணிமொழியும்.

“உண்ணா னொளிநிறா னோங்குபுகழ் செய்யான் றுன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அஆ இழந்தானென் றெண்ணப் படும்”

என்னும் நாலடியார் (1:9) திருமொழியு மெல்லாம் இப்பகுதியின் கண் வருஞ் சொற்பொருட் கருத்துகளொடு பெரிதும் ஒத்து நிற்றல் நினைவுகூரற் பாலது.

(94-111) இவ்வாறு ஒழிந்தனர் போக - என்றிவ்வாறெல்லாம் இம்மையின்பம் நுகரப்புக்குத் தம் வாழ்நாட்களைக் கீழ்நெறியிற் கழித்து மாண்டோர் போக, செவ்விய மெய்ப்பொருள் உணர்தும் என்று ஒப்புடன் புகுந்து - நேர்முகமாய்விளங்கும் மெய்யான பொருளை அறிவேமென மனவொருமையுடன் ஆராயத் துவங்கி, கடவுள் தன்மையும் உயிரின் தன்மையும் புடைபட ஒற்றி வரம்பு அளந்து உணராது மயங்கக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/200&oldid=1586944" இலிருந்து மீள்விக்கப்பட்டது