உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

மறைமலையம் - 20

மக்களைத் தலைவர் என்று ஒக்கக் கூறி உழிதருவோரும் இறைவனியல்பையும் உயிரினியல்பையும் பக்கத்தே பக்கத்தே வைத்துப் பொருத்தி அதன்தன் எல்லையினை அறிவான் அளந்துபார்த் துணராமல் அவ்விரண்டனையும் ஒன்றினொன் றாய் மயங்க உணர்ந்து அம்

மயக்க உணர்ச்சியினால் மக்களெல்லாரையும் அவர் தமக்கு முதல்வனான இறைவனேயாவரெனக் கீழோர்க்கு மனம் இசையக் கூறித் திரிகின்றவரும், அறிவாய் அருளாய்ச் செறியும் ஒருபொருள் சிறுமையும் மடமையும் எய்தி வெறுவிதின் உயிரும் உலகமும் ஆகும் என்போரும் - அறிவுருவாயும் அருளுருவாயும் யாண்டும் நிறைந்துள்ள ஒருமுழுமுதற் பொருள் தானே தன் பருமையிழந்து சிறுமையும் அறியாமையும் அடைந்து ஓர் ஏதுவும் இன்றி வாளாப் புன்முதலான சிற்றறிவுயிர்களும் மண்முதலான ஐம் முதற்பொருள்களுமாய்த் திரிபெய்து மென்று கூறுகின்றவரும், கண் புலன் ஆகுவ கருத்தின்தோற்றமாய் உள்புகுந்து உணர்வோர்க்குப் பொய்ப்பொருளாகலின் கோயில் என்னே மேவி ஆங்கு உறையும் தூயபேரொளிப் பிழம்பெனல் என்னே வஞ்சமாந்தர் பிறர் நெஞ்சம் பிணிக்கக் கல்லையும் மண்ணையும் வல்லிதின் பொருத்திச் சூழ்ச்சியின் அமைத்த கீழ்த்திறம் அன்றோ என்று உரை கூறுவோரும் ஆக புறத்தே கண்ணுக்குப் புலனாவனவெல்லாம் அவற்றை எண்ணுகின்ற எண்ணத்தின் றோற்றமாய்த் தமது அகத்தே புகுந்து

ஆராய்வார்க்கு வெறும் பொய்ப்பொருள்களாய்ப் போய் முடிதலின் 'வெளியே கட்புலனாகும் பொருள்களான

திருக்கோயில் என்பன எத்தன்மைய! அத்திருகோயிலின்கட் பாருந்தியிருக்கும் மாசற்ற பெரிய ஒளிப்பிழம்பென்பதுதான் எத்தன்மையது! தந் நயம் விரும்புங் கரவுடைய மக்கள் சிலர் ய பிறரது உள்ளத்தைத் தம்வயப்படுத்தும் பொருட்டுக் கல்லையும் மண்ணையும் வேண்டுமென்றே இங்ஙனம் இருத்திச் சூழ்ச்சியினால் ஏற்படுத்திய தாழ்ந்த செயல்களல்லவோ இவை!’ என்று தமக்கேற்ற சொற்களையே பேசுகின்றவருமாக, பொன்றிய மாக்கள் மணலினும் பலர் - உலகத்தில் இறந்துபட்ட அறிவிலா மக்கள் ஆற்றுமணலினும் பலராவர்!

‘செவ்விய’ மெய்ப்பொருளென்பது அவரவர் கருதிய வாறெல்லாம் வேறு வேறாய்த் தோன்றாது மெய்யுணர் வினார்க்கெல்லாந் தன்னிலையினை நேரே ஒரு படித்தாய்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/201&oldid=1586945" இலிருந்து மீள்விக்கப்பட்டது