உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

-

281

அறிவியற்கை யுடையையாய் யாதொன்று பற்றின் அதன் வண்ணமாய் நிற்குந் தன்மையை; மற்றுஅவை அறியாப் பண்பின சொன்ன அவையெல்லாம் அறியாத தன்மையன; அனையைாயினும் முன்பே படலம் மூடிய கண்ணின் மிடைபடு மாசுபொதிந்த நீர்மையை நீ அங்ஙனம் அறிவியற்கை உடையையாயினுந் தொன்றுதொட்டே படலம் மூடிய கண்களைப்போற் செறிகின்ற அறியாமையாகிய கறை மூடி இயல்பினை, வீசிய ஒளிப் பிழம்பாகி வெளிப்படு முருகன் ஆனாது சுரந்த அருளினனாகலின் - ஆனால் இயற்கையே வினையின் நீங்கி விளங்கிய அறிவொளிப் பிழம்பாய் வெளிப்படு முருகப்பெருமான் ஒழியாது ஊற்றெடுக்கும் அருளுடையனாதலால், நின்னைமறைத்த துன்னிருள் துரந்து தன் அருட்பொலிவால் நின் அறிவு கொளீஇ நின் நின்னை இயற்கையே மறைத்த செறிந்த மலவிருளை ஓட்டித் தன் அருள்விளக்கத்தால் நின் அறிவை விளக்கி, அருகா இன்பம் தருதற்பொருட்டு அம்முகத்தால் நினக்குக் குறையாத பேரின்பத்தைத் தரும் பொருட்டு, மெய்நிலை இருத்தி மாசுபோக்கித் தன் நிலை நினக்குத் தந்தனன் - செம்பொருள் காணும் மெய்யுணர்வின் நிலையில் நின்னை இருத்தி நினது மலவழுக்கைக் கழித்துத் தனது திருவடிப் பேரின்பநிலையை நினக்குக் கொடுத்தருளினன்; கோடி "நீ நீ அதனைப் பெற்றுக்கொள்வாயாக”; என்று உறுதி கூறி விடுப்பத் தேறிப் பன்னிருகையன் முன்னர் எய்தி - என்று உயிர்க்குறுதி பயப்பன அறிவுறுத்து விடுப்ப அவ்வாற்றால் உள்ளந்தெளிவடைந்து பன்னிரு திருக்கைகளையுடைய முருகப்பெம்மான்றிருமுன் அடைந்து;

-

புலப்படக் (192) கூறி (206) என இயைத்துக் கொள்க.

-

ம்பல

கடம்படல் நெறிச்செல்லல், கடம் காட்டுநெறி; “க கிடந்த காடுடன்கழிந்து” (காடுகாண், 90) என்பது சிலப்பதிகாரம்; ஐம்பொறிகளினூடு தன்வயமின்றிச் செல்லும் மனவறிவு பலவாற்றாலும் அலைக்கப்படுதலின் ஐம்பொறிகள் காடாகக் கருதப்பட்டன. வளி - உயிர்ப்பு, மூச்சு.

‘மற்றவை’ யென்றன; உடம்பு ஐம்பொறி அகக்கருவி வளி முதலியன. ‘மாசு’ ஆணவமலமென்னும் அழுக்கு; ‘வீசிய' ஒளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/306&oldid=1587050" இலிருந்து மீள்விக்கப்பட்டது