உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

மறைமலையம் - 20

வீசிய; அஃதாவது ஒளிவிளங்கிய வென்றற்கு. ‘வினையினீங்கி விளங்கிய' வென்பது கருத்து.

‘துன்இருள்' செறிந்த ஆணவ வல்லிருள்; ஆணவமலம் அறியாமை பயத்தலின், இருளெனப்படுவத மரபு; “துன்னிருளே” என்னுந் திருவாசகத்தில் (சிவபுராணம்) போல. ‘துரந்து ஓட்டி; ‘என்னுடையிருளை ஏறத் துரந்தும்’ (கீர்த்தித் திருவகவல்) என்று மணிவாசகப்பெருமான் இப்பொருளிலேயே அருளிச் செய்தல் காண்க; புநானூற்றிலும் (14) "முன்பு துரந்து சமந் தாங்கவும்” எனப்போந்தது.

‘எம்நிலை' யென்றது, எமது சேர்க்கையில் என்றற்கு. கோடி, கொள் பகுதி; தேறி, கலங்கிய உள்ளம் தெளிந்தென்க.

இப்பகுதியிற் சைவசித்தாந்த நுட்பங்கள் மிக அழகாகத்

தெளித்துக் கூறப்பட்டுள்ளன.

(208-231) இமையம்பூத்த பனிகெழு சுனையில் அமையாது ஆடிய உமைதரு புதல்வோய் - இமைய மலையின்கண் விளங்கிய குளிர்ச்சிபொருந்திய நீரூற்றில் தோன்றி அவாஅடங்காமல் ளையாடிய உமைப்பிராட்டியார் தந்த குழந்தாய், எரிவிழித்து இமைக்கும் திருநுதல் தந்தைக்கு ஒருமொழிவிரித்த தெளுறும் உணர்வோய் - தீக்கண் திறந்து ஒளிவிடும் அழகிய நுதலையுடைய தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓமெனும் ஒருமொழிப் பொருளை விரித்தறிவுறுத்த தெளிவு மிக்க பேரறிவுடையோய், வானோர் உறுகண் தீர்ப்ப மேல் ஓர் ஐவடிவேலைக் கையினில் எடுத்தோய் - தேவர்களுடைய துன்பங்களை நீக்கும்பொருட்டு முன்னொருகால் ஒப்பற்ற தகட்டுவடிவினை யுடைய கூரிய வேலைக் கையினில் ஏந்தியோய், வேந்தன் தந்த ஏந்து - எழில் செல்விக்கு வரைபுரை மார்பம் வரையாது அளித்தோய் தேவர்கோன் ஈந்த மிக்க அழகினையுடைய புதல்வியாகிய தெய்வயானைக்கு நினது மலைபோன்ற மார்பாற் றழுவும் இன்பத்தை அளவு படாமல் உதவியோய், குன்றவர் வளர்த்த பொன்திகழ் வள்ளிக்குக் கொழுகொம்பு ஆகிய விழுமிய தோளோய் - குன்றத்துறைவாரான குறவர்கள் எடுத்து வளர்த்த அழகு விளங்கிய வள்ளியம்மையாகிய பூங்கொடி போல் வாளுக்குக் கொழுகொம்பாய்நின்ற சிறந்த தோள்களை யுடையோய், அரும்தமிழ்க் கீரனைப் பொருந்திக் காத்தோய் -

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/307&oldid=1587051" இலிருந்து மீள்விக்கப்பட்டது