உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

283

.

அரிய தமிழ்நலம்வாய்ந்த நக்கீரதேவரை அணுகிக் காத்த பெம்மானே,எம்மனோர்க்கு எளிவந்த செம்மையாள - ஏழையேன் போன்றார்க்கு எளிதில் எழுந்தருளிவந்த செம்மையுடையோனே, ஒருவ -ஒரு முழு முதலோனே, சிறுவ - இளையோனே, கருமயில் முருக - நீலமயிலை ஊர்தியாக உடைய முருகப்பெருமானே, மறைமுடிதன்னில் நிறை திரு உருவினை- திருநான் மறைகளின் முடிபில் நிறைகின்ற சிறந்த உருவுடையை, கண்ணும் உணர்வும் கதுவாப் பெற்றியை - கண்ணுங் கருத்தும் அணுகிப் பற்றவியலாத பெருந்தன்மையுடையை, ஐம்பெரும் பூதமும் ஆகிநின்றனை மண் முதலான ஐம்பெரும் பொருள்களும் புணர்ந்து நின்றனை, உலகுநின் உருவே - அவ்வைம் முதற்பொருள்களின் கலவையான இவ்வுலகம் நினக்கு உருவாயுள்ளது, ஒளிகள் நின் விழியே ஞாயிறுந்திங்களுந் தீயுமான ஒளிகன் நினக்குக் கண்களாயுள்ளன; அலகிலாச் சமயத்து அவ்வவர் தமக்கு பலவேறு உருவில் நிலவுகை நீயே - எண்ணிலாச் சமயங்களையுடைய அவ்வச்சமயத் தார்க்கும் பலவேறு வகையான திருவுருவங்களில் விளங்கு கின்றனை நீயே, ஆறு நின் முகம் - ஆறு நின் திருமுகமாம், ஐந்து நின் வடிவு - மண்முதலாக ஐம்முதற் பொருள்களும் நின் உருவாகும், நான்கு நின்மொழி - திருநான்மறைகளாகிய நான்கும் நின் திருமொழிகளாகும்; மூன்று நின் கண் மூன்று நின் கண்களாகும், இரண்டு நின் துணை - வள்ளி தெய்வயானையென இருவர் நின் வாழ்க்கைத்துணைவராவர், ஒன்று நின் வேல் ஒன்று நின் வேலாகும், மருண்ட உணர்வொடு மாட்சிமை எய்தா முருடனேற்கும் திருவருள் தருகை மயங்கிய அறிவொடு அருட்டன்மை அடையமாட்டாத முரட்டுத்தன முடையேற்குந் திருவருள் தருகின்றனை;

-

L

-

‘பூத்த’, இங்கு ‘விளங்கிய’ வென்னும்பொருட்டு; “மீனாரம் பூத்த வியன்கங்கை நந்திய” என்னும் பரிபாடலிற் (16, 36) போல. சிறுமகார் நீரில் அவாவடங்காமல் விளையாடுதல் இயற்கை யாகலின் ‘அமையாது ஆடிய' வென்றார். ‘எரி' ஆகுபெயரால் நெற்றிக்கண்ணை உணர்த்தும்; இமைத்தல் - ஒளிவிடல், திவாகரம். 'ஒருமொழி', 'ஓம்' என்பது, அஃது ஆகுபெயராய் அதன் பொருளை உணர்த்திற்று; இஃது “எண்ணி யுருகும் குருநாதன் என்பால் உரைத்த ஓர்மொழியே” எனப் பட்டினத்தடிகளும் அருளிச்செய்தனர். உறுகண் - துன்பம்; ஆவது தேவர்கட்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/308&oldid=1587052" இலிருந்து மீள்விக்கப்பட்டது