உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

மறைமலையம் - 20

சூரனால் விளைந்த துன்பம் என்க.

ஐம்மை - தகட்டுவடிவு, திவாகரம்.

L

வடிவேல் - வடித்துக் கூர்மையாக்கியவேல்; முருகப்பிரான் கையது வடிக்கப்பட்ட தன்றாயினும், வேல் என்னும் பெயரொப் புமை பற்றி அவ்வாறடைகொடுத்தார்; பிள்ளையாரது கைவேல் அருள் வடிவினது; “உபாங்கமெல்லாந் தானருள் சிவஞான சித்தியாரிலும் (1, 47). தேவர்கட்கு வேந்தன் இந்திரன்.

என்றார்

‘வள்ளி’ யென்பது ‘ஒருகொடி' யெனவும் பொருள்படு மாகலின், அதுகண்டு அடிகள் 'கொழுகொம்பு' எனத் தந்துரைத்த அழகு இங்கு நினைவுகூர்ந்து மகிழற்பாலதாகும். எனவே'வள்ளி' யென்னுஞ் சொல்லுக்கு ‘வள்ளியம்மை யென்னும் பூங்கொடி போல் வாளுக்' கென உரைகூறி மகிழ்கவென்பது.தெய்வயானை அம்மைக்கு ‘மார்பம் அளித்தோய்' எனவும், வள்ளியம்மைக்குக் "கொழுகொம்பாகிய தோளோய்' எனவும் அருளிச்செய்த குறிப்பு, தெய்வயானையைப் போலல்லாமல் வள்ளியம்மையைக் களவினால் வேட்ட வேறுபாட்டுண்மை விளங்கவைத்தற் பொருட்டென்க.

-

கருமை, இங்கு நீலநிறம் உணர்த்தும். மறைமுடி, வேதத்தின் முடிந்த கருத்து. அலகு அளவு. 'உருவினை' என்பதில் 'ஐ' முன்னிலை விகுதி; 'நிலவுநை', நகரம் பெயரிடைநிலை; 'தருகை என்புழியும் அது. 'முகமே' முதலானவற்றில் வரும் ஏகாரங்கள் அசை. மருண்ட உணர்வுடையார் எய்தா மாட்சிமையாவது இறைவனது அருட்டன்மையேயாகு மாகலின், அங்ஙனம் உரை கூறப்பட்டது.

(231 - 235) என்று யான் அறி அளவையின் ஏத்த என்றிங்ஙனமெல்லாம் யான் தெரிந்தவரையில் வழுத்த, தான் உவந்து குறிப்பு அரும் இன்பத்துப் பிறக்கினன் எனை அப்பெருமான் மனமகிழ்ந்து சுட்டியுணர்தற்கரிய பேரின்பத்தில் உயர்த்து வைத்தனன் என்னை, அதுமுதல் இன்பம் ஆர்ந்து அங்கு இருத்தல் அல்லது துன்பம் என்பது அறியேன்

அதுமுதலாக இன்பம் நுகர்ந்து அவன் றிருவடிக்கண் வாழ்ந்திருத்த லல்லாமல் துன்பமென்பது சிறிதும் அறியேன்;

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/309&oldid=1587053" இலிருந்து மீள்விக்கப்பட்டது