உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

285

தான், பெருமான்; இறைவன்றரும் பேரின்பநிலை இன்ன தென்று குறித்துக்கூறல் இயலாததாகலின், 'குறிப்பரும் இன்பம்’ எனப்பட்டது. என்றது, அவன் சுட்டியுணரப்படா னென்பது கருத்தென்க.

‘பிறக்கினன்’, பிறவினை; 'உயர்த்து வைத்தனன்' என்பது பொருள்; ‘பிறங்கல்’, உயர்தல்; “பெருமை பிறங்கிற் றுலகு என்னுந் திருக்குறளிற் (23) போல; ஆர்தல் - நுகர்தல்.

-

(235-269) அன்பொடு நீயும் அவன்வயின் செலினே பாய் அருள் ஒருவந்தம் தருகுவன்மன்ற - உள்ளன்பொடு நீயும் அப் பெருமான்பாற் சென்றால் அவன்றன் பெருகிய திருவருளை உறுதியாய் நினக்குத் தந்தருளுவான் மிகவும் நின்னை அணுகி, தலைப்பெயல் மாரியின் மருவந்து மலைப்படு நீத்தம் - கார்காலத் துவக்கத்திற் பெய்யும் பெரு மழையினாற் பொருந்தி மலை முகட்டி லுண்டாகும் அருவிவெள்ளம், பைம் நிறப் பீலியும் செம்நிறத் துகிரும் வேழ மருப்பும் காழ் அகில் துணியும் ஒருங்கு வரன்றி மருங்கு விரைஇக் குண்டு கண் படுகரில் மண்டி நிறைந்தாங்கு பசுமையான நிறம் வாய்ந்த மயிற்றோகையும் சிவந்த நிறம் வாய்ந்த பவளமும் யானைகளின் வெண்ணிறமான கொம்பும் அகக்காழ் உள்ள அதிற்கட்டைகளின் துண்டும் ஒன்றாக வாரிக்கொண்டு அம்மலையின் பக்கங்களில் விரைந்தோடி வீழ்ந்து ஆழமுான இடத்தையுடைய பெரும் பள்ளங்களில் மிக்குச் சென்று நிறைந்தாற்போல், அவலக் கவலையும் உவலைச் சுவையும் முரணுறு அறிவும் திருகிய செருக்கும் முதலறப் பெயர்த்துச் சிதையாது ஓடி அன்பின் நிறைந்த இன்ப வெள்ளத்து வறுமையாலுண்டான கவலையும் உலகப் பொய் நுகர்ச்சியும் மாறுபடுகின்ற தீய அறிவும் முறுகியசெருக்கும் அடியோடு இல்லையாம்படி நீக்கி இடையில் அழியாமற் சென்று அன்பினால் நிறைந்த இன்பமென்னும் வெள்ளத்தின்கண், பழியாக் கடும்பொடும் விழுமிதின் துவன்றி ஏழுலகு அழியினும் அழியாது ஊழி ஊழியும் வாழ்மதிசிறந்தே - பழிக்கப்படாத சுற்றத்தாருடன் சிறப்பாய் நிறைந்திருந்து ஏழுலகம் அழிந்தாலும் அழியாமல் ஊழிஊழிக்காலமும் எல்லா நலங்களும் மிகுந்து வாழ்வாயாக வென்பது.

'நீயும்' என்றது, எதிர்ப்பட்ட புலவரை; பாய்அருள் பெருகிய திருவருள்; ஒருவந்தம் உறுதி; இச்சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/310&oldid=1587054" இலிருந்து மீள்விக்கப்பட்டது