உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

287

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை (பெரும்பாணாற்றுப்படை,268) என்பதன் உரையைக் காண்க.(28)

29. காப்புக் கைம்மிக்குக் காமம் பெருகி யுரைத்தல்

"சிறந்த பொருளொற்றிச் செவ்வே ளிவரை

மறங்திங் குயிர்வாழ மாட்டோம் - பறந்தோடித் திண்டோ டழுவுவ மின்றேற் செழுவரையைக் கண்டேறிக் கீழ்விழுவங் காண்.

و,

இ-ள்) சிறந்தபொருள் - ஏழையேன் உயிர்க்குச் சிறந்த பொருள், ஒற்றிச் செவ்வேள் - திருவொற்றிநகரில் எழுந்தருளியிரா நின்ற முருகப் பெருமானே யாவர், இவரை - இப்பெருமானை, மறந்து இங்கு உயிர்வாழ மாட்டோம் மறந்து இவ்வுலகில் உயிர் வாழமாட்டோம், பறந்து ஓடித்திண்தோள் தழுவுவம் - விரைந்து சென்று அவரது வலிய தோளைத் தழுவுவோம், இன்றேல் அங்ஙனம் அது கூடாதாயின், செழுவரையைக் கண்டு ஏறிக் கீழ்விழுவம் - ஒரு பெரிய மலையைக் கண்டு அதன் உச்சியில் ஏறிக் கீழே உருண்டு விழுந்து உயிர் துறப்போம்;

'சிறந்தபொருள் ஒற்றிச் செவ்வேள் இவரை மறந்து இங்கு உயிர்வாழ மாட்டோம்' என்பதன் கருத்து,

“என்னி லாரு மெனக்கினி யாரில்லை

என்னி லும்மினி யானொரு வன்னுளன் என்னு ளேயுயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக் கென்னு ளேநிற்கு மின்னம்ப ரீசனே'

என்னும் அப்பரடிகள் தேவார (திருவின்னம்பர், திருக்குறுந் தொகை, 1) அருண்மொழிக் கருத்தோடு ஒத்துநிற்றல் நினைவு கூரற் பாற்று.

'செவ்வேள்' சிவந்த நிறத்தினையுடைய வேள் என முருகப் பிரான் மேல் நின்றது; வேள் - காமன்; மாட்டோம், தழுவுவம், விழுவம் எனப் பன்மையாக வந்தது, தலைவி தன்னையொத்த ஏனைக் கற்புடை மகளிரையஞ் சேர்த்துக் கூறியவாறாம்; அல்லது அவள் தன்னைத் தன்மைப் பன்மையில் வைத்துக் கூறின ளென்றலுள் ஒன்று. ‘பறந்து’ என்றது, விரைவுக் குறிப்பு; செழுவரை,

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/312&oldid=1587056" இலிருந்து மீள்விக்கப்பட்டது