உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

மறைமலையம் - 20

வளமான மலை ஆவது உயர்ந்தமலை யென்றற்கு; காண், முன்னிலையசை.

து, செவிலித்தாய் முதலியோரது காவலிற் சிறைப் பட்டுள்ள தலைவி காமம்பெருகித் தனது கற்புடைமை உரைத்த வாறாம். தன்னிலைமையைப் பிறரறியவொட்டாதபடி எவ்வளவு அடக்கினாலும் தன்னுள்ள நிகழ்ச்சியால் அஃது அடங்காது வெளிப்படுதலே இனைய இடங்களிற் ‘கைம்மிகல்' எனப்படும். ‘கைம்மிகல் நலிதல் சூழ்ச்சி வாழ்த்தல்” (பொருள், 260) என்னுந் தொல்காப்பியத்தானும் அதன் உரையானும் இது தெளியப்படும். (29)

66

30. அடியுறையிடுதல்

‘அடியுறை யிடுத’லாவது, திருவடிக்காணிக்கை செலுத்து

தலென்க.

“காணப் பெறாததொர் காட்சியை யேனுங் கசித்தவன்பாற் பேணப் பெறுமுக் கருவியிற் காண்பர் பிறங்குமொற்றி வாணப் பெருந்தகை யென்பது கொண்டு வழங்குமன்பாற் பூணப் பெறுமிந்த மும்மணிக் கோவையுன் பூங்கழற்கே.”

(இ-ள்) காணப் பெறாததோர் காட்சியையேனும் - ஏனை எவ்வாற்றானுங் காண்டற்கியலாததோர் அரிய தோற்ற முடையையே யாயினும், கசிந்த அன்பால் நெகிழ்ந்த உள்ளன்பினால், பேணப்பெறும் முக்கருவியின் காண்பர் - போற்றப்படுகின்ற நினைவு சொற் செயல் என்னும் மூன்று கருவிகளாலும் நின்னைக் காணும் பெருந்தவமுடையோர் நின்னைக்காண்பர், பிறங்கும் ஒற்றி வாணப் பெருந்தகை என்பது காண்டு விளங்கும் திருவொற்றிமாநகரில் திருக்கோயில் கொண்டுவாழும் பேரருட்டன்மையுடைய பெருமானே! என்னும் அக் கருத்தை உட்கொண்டு, வழங்கும் அன்பால் - ஏழையேன் தேவரீருக்கு அடியுறையாக வழங்கும் உள்ளன்பினால், பூணப்பெறும் இந்த மும்மணிக்கோவை உன் பூங்கழற்கே தேவரீர் அணியப்பெறும் இந்த மும்மணிக்கோவை' யென்னும் நூல் நும் அழகிய திருவடிகட்கு என்பது.

-

பேணல் இங்குப்பாதுகாத்துப் போற்றுதல் என்க; என்றது,

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/313&oldid=1587057" இலிருந்து மீள்விக்கப்பட்டது