உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

289

அன்பு நெறியினின்று பிறழாதபடி காத்துப் போற்றுதலென்பது, வாணர், வாழ்நர் என்பதன் திரிவு. 'பெருந்தகை’ யென்றது, வழங்குவார் எவராயினும் அவரது அன்பினையுன்னி அதனை ஏற்கும் பெருந்தன்மையுடையா ரென்றற்கு. 'மும்மணிக்கோவை’ இந்நூலின் பெயர்.

சாலவும் அரியையாயினும் அன்பினால் எளியையாதல் போல் இம் ‘மும்மணிக்கோவை' யென்னும் நூலை நீ பூண்டருளுதல் இசையாதேனும், அன்பினால் வழங்குதலின் நீ அதனை ஏற்று அணிந்தருளுதல் கூடும் என்று உரைத்தருளிய வாறாம். அன்பிற்கொன்றுமே எல்லாம்வல்ல இறைவன் எளியனாம் உண்மை, “யாவராயினும் அன்ப ரன்றி அறியொணா மலர்ச்சோதியான்" (திருவாசகம், சென்னிப் பத்து, 1) என்னுஞ் செந்தமிழ் அருளுரையால் இனிது தெளியப்படும். (30)

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை உரை - முற்றும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/314&oldid=1587058" இலிருந்து மீள்விக்கப்பட்டது