உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை றிரைபொரு கரையிற் புரையின் றோங்கிப் பசுங்குழை கலித்து நசைநனை யரும்பித் தென்றலொடு புகுந்த வண்டிசைப் பாணன் 60 இனிமையின் மிழற்றுந் தனியிசைக் குவந்து பொதியவிழ் மலரின் நறவுணக் கொடுத்து, நினைதொறுஞ் சுவைக்கும் நீனிறக் கனிகள் இலைதொறுங் குழும நலமிகப் பயக்குங் கோழரை நாவல் கோட்டி னுகுப்பப்,

65 பாலிடை விழூஉம் நீலமணி கடுப்ப ஆமிடை விழூஉ மருஞ்சுவைக் கனிகள் அளையிடைத் துஞ்சு மரும்பெடைக் களிப்ப வேப்பின் கொழுநனை யேய்க்கும் நெடுங்கட் கவைக்கா லலவன் றாளிடை யிடுக்கி

70 யன்புடன் சென்றாங் கருத்த னோக்கி, என்னையு நோக்கினன் அன்னதும் நோக்கினன், உய்குவ தறியான் போலச் செய்குவ தொன்றுங் காணா தன்றுநின் றனனே, நீகண் டனையேல் நெஞ்சநெக் குருகி

75

யின்னுயிர் வாழலை மன்னே, கொன்னுறு பேய்கண் டனைய பெற்றிய னாகி

நிறையும் அறிவும் முறைமுறை சாயத்

15

துன்றுநிலை நீங்கா மரம்போற்

கன்றிய நோக்கமொடு நின்றவ னிலையே.

(4)

5. தோழிமுன்னுறவுணர்தல்

நிலையுந் திரிந்து நிறையுங் கடந்து

தலையுங் கவிழ்ந்த தகையண்- மலைநிவந்த

தென்னப் பொலியும் எயிலொற்றிச் செவ்வேண்மேன் மன்னுங் கருத்துடைய மாது.

(5)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/40&oldid=1586774" இலிருந்து மீள்விக்கப்பட்டது