உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

மறைமலையம் - 20

6. பிரிவாற்றாத தலைவிக்குத் தோழிகூறல் மாதே பெரிதும் வருந்துவ தென்னை மனந்திரிதல் ஏதே யறியிற் கொடுமையன் றோவன்னை யீர்ம்பொதும்பிற் சூதேய் துணைமுலை யாகந் தழுவித் துயர்மிகுத்த போதேர் பொழிலொற்றிச் செவ்வேள் வரையப் புகுந்தனனே

7. இன நலனுரைத்தல்

புகலரு நூழையிற் போக்கரும் பொருள்போல் இகலறு சைவத் திறஞ்செலா நெஞ்சினர்; நெறிப்படு மக்கட் கறிவு பேதுறுக்குங் கவலையிற் பிறரை மயக்குநர் உவலிடு

5 பதுக்கையிற் புன்பொருள் அகத்திடு கரவினர்; புனைமாண் கோதை பொருந்தச் சூட்டியும் வினைமாண் விளங்கிழை வீறுபடத் திருத்தியுங் கொழுங்கயன் மழைக்கண் பிறழ்தொறு மனந்திரிந்து செழுந்துவர்ச் செவ்வாய் முத்தங் கொண்டும்

10 நசைபிறக் கிடாது முலைதழீஇச் செல்லும் நெஞ்சமர் காதலர் பின்செலு மடவார் பஞ்சின் மெல்லடி பைதலுற் றுழப்ப உறுத்துக் கிழிக்கும் பரல்கெழி முரம்பிற், புலியத ளுடுக்கை தைஇ வலிகெழு

15 மூவிலை வடிவே லொருவயின் விளங்கக் கொன்றைநனை பிணைத்த மன்றலந் தொடலை பவளமலை யுறழும் மார்பிற் றுவள

மலைதரு மடந்தை குறங்கின்மிசை யிருந்து வலம்படு கையாற் பெரும்புறங் கவைஇ

20 உலம்படு திரடோ ளொருமுலை யொற்ற நரையே றூர்ந்த புரைசா றோற்றம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/41&oldid=1586775" இலிருந்து மீள்விக்கப்பட்டது