உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை நினைதொறுங் குழையு முரவோர்க்கு வைகலுங் கேடுபுரி நெஞ்சிற் பீடிலா வமணர்,

பீடுயர் செந்தமிழ்க் கூடலிற் றோன்றிப்

25 பொய்படு புன்பொருள் கான்றிருள் பரப்பி மெய்தரு சைவ நன்னெறி பிழைப்ப

30

மாணா வழிப்படூஉங் கூன்பாண்டியன்முதல் ஆறுசென் மாக்களைச் சூறைகொண் டெறிந்து பெருந்துய ருறுக்குங் காலை, யருந்தவம்

நிற்பெறு பொருளிற் பற்பக லாற்றி

வேண்டிய பெரியோர்க்கு வேண்டியாங் களிப்பக் கருக்குழிக் கிடக்குந் தன்மையை யன்மையின் உருப்பெற வருகுநை போல வவரகத்

தொருபெரு மாயம் பெருகுறச் செய்து

35 புறம்பெயர்ந் தெய்தி யறந்தரு பெருமைச் சண்பையிற் றோன்றினை மாதோ, பின்பு கிண்கிணி யொலிப்பத் தந்தைபிற் சென்று தண்கழு நீருஞ் செந்தா மரையும்

ஒருங்குதலை மயங்கிய பெருந்தட மருங்கின்

40 அரும்பெறற் றந்தையைத் தலைக்கூடினையே, அதற்புறம் முருந்துறழ் வெண்ணகைப் பெரும்பெய ரன்னை

45

கரும்புங் கனியும் பெருஞ்சுவைப் பாலுந்

திருந்திய தேனும் ஒருங்குறக் கூட்டிக் குழைத்தெடுத் தன்ன விழைவறா மரபின்

முலைபொழி யமிழ்தம் வள்ளத் தூட்டப் பவளவாய் மடுத்துத் திவளொளி சிறந்து பழகுறு தந்தைக்கு மழவிடை யமர்ந்த தந்தையைத் தாயொடுங் காட்டிப், பின்றைக் காண்டகு திருவிளை யாடன் மாண்டகச்

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/42&oldid=1586776" இலிருந்து மீள்விக்கப்பட்டது