உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

50

55

60

மறைமலையம் - 20

செய்திறம் அறியார் உய்திறம் நோக்கிப் பற்பக லியற்றிய பின்னர் முற்படர்ந் தருந்தமி ழாய்ந்த பெருந்தமிழ்க் கூடற் குலச்சிறை முனிவ னெதிர்கொளச் சென்று பாற்கடற் பிறந்த சீர்த்திரு வாகலின்

இருமுலைக் குடத்தின் ஒருவழி யடக்கி, மலைமக ளாதலின் முலைதரல் சுருங்க வள்ளத் தேந்திய சில்லமு தருந்தி ஆனா வேட்கையின் வருவோ னிவனென முலைமுகந் திறந்த வழிவழிப் போக்கிப்

பாற்கட லூட்டிய பவளச் செவ்வாய்த்

தென்னவன் றேவிக்கும் பொன்போற் புதல்வன் ஆயினை யென்ப தறியத் தெருட்டி,

வழுதி கொண்ட முழுநோய் தீர

அன்னை யூட்டிய வமிழ்தை யின்னுரைச்

65 செந்தமி ழாக்கித் தந்தது கெடுத்துப், பாற்படு பூதமும் மேற்படு பொருளுந் தன்வழிப படூஉந் தன்மைய வாகலிற் றான்பிறி தாகல் வேண்டிற் றலைமயங்கித் தந்தொழில் திரிந்து நந்து மென்பதும்,

70 இழிக்கும் பொருளுஞ் செழிக்கு மென்பதும் நீரினும் நெருப்பினுங் காட்டினை யொருதிறம் பனையினும் என்பினுங் காட்டினை மறுதிறம், இனியே அறிவொளி கொளீஇப் புரைநெறிப் பொய்ச்சமண் முறிய நூறி மெய்த்திறங் கிளக்கும்

75

மெய்ப்பொருட் சைவம் மெய்வகை விளக்கிப்

பரங்குன் றமர்ந்தனை மாதே, அதுபெயர்ந்

திரங்குவா லருவி நிரம்பத் தோன்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/43&oldid=1586777" இலிருந்து மீள்விக்கப்பட்டது