உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

ஆவினன் குடியின் அசையினை மாதோ, அதற்புறம் ஏரகத் தெழுந்தனை மாதோ, நேரிதின்

80 ஒருமொழி வைத்த வுட்பொருள் விரிப்பத் திருவளர் தணிகையினமர்ந்தனை, அதற்புறம் நின்கழற் கிடந்த அருகா அன்பிற் சைவம் வளர்க்கும் மெய்வகை மரபின் உடல்பொரு ளாவி யுனக்கென நிறுவி

85

90

நிற்குறித் தெழூஉம் அற்கும் இன்பத்து

நின்பெய ரல்லது பிறிதொன்று நவிலா மன்பெரும் புலவோன், றந்தையைக் காட்டுந் தாயெனப் போந்து நாயினுங் கடைய என்னையு மொருபொருட் படுத்து நின்னியல்

பொருதுறைப் புகுத்தி யுரைக்கு முரவோன் சோம சுந்தர தேசிகப் பெயரின்

ஏமுற வந்தோற் கருளக் காமுற்றுப் பொருளுட லாவி பொருள்பெற வழங்கி வேண்டுழி யெல்லாம் விரும்பிநின் றேத்த

95 அவற்கெளி வந்த தவப்பெருந் தன்மையை யொற்றியூர்ப் புகுந்து வைகினை, முற்றவும் நின்பெருந் தன்மையை யறிந்து நின்னடி யிரவொடு பகலும் ஒருவாது வணங்கி நாத்தழு தழுப்ப ஏத்துரை கிளந்து

100 நெஞ்சநெக் குடைந்து மெய்விதிர் விதிர்ப்பப் பெறுவதற் கெளியேன் அரியெ னாயினும் அவனொடு கெழூஉஞ் சார்பின் இவணது சிவணவும் பெறுகுவெ னன்றே, குவடுகெழு பெருநிறப் பொன்மலை யடைந்த

105 கருநிறக் காக்கைக் குறுவதா லெனவே.

19

(7)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/44&oldid=1586779" இலிருந்து மீள்விக்கப்பட்டது