உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

❖ 20* மறைமலையம் – 20

8. வள்ளன்மை கிளத்தல்

உறுபொருள் காணா வுணர்விலார் மாட்டுப்

பெறுபொருள் வேண்டல் பிழையால் - நறுநெஞ்சே யேந்துமுலை வள்ளி கொழுநன் எழிலொற்றிப் போந்து குடியிருக்கும் போது.

9. தலைமகள் தோழிக்கு அறத்தொடு நிற்றல்

போதாய்ந்து வெண்ணிலவொக்கும் பொடிமணற் பூஞ்சிற்றிலொன் றோதாயஞ் சூழ இழைத்தாடுங் காலை யொருவடிவேற் சூதான காளை திருவொற்றி யீசர் துணைப்புதல்வன் காதாருங் கண்ணி சிதைத்துநக் கோடிக் கரந்தனனே

5

10. ஒப்புமைகூறி அருணிலை வேண்டல்

கரவறு மாந்தர்க்கு விரவுறு பழியின்

மறுவொடு விளங்கு நிறைகதிர் மதியம்

வெண்கதிர் விரிக்குந் தண்ணென் காலைப்

புலவுமணங் கமழும் பாக்கத்து நலங்கெழு

தெரிவின் மாக்கள் புரிதிமில் புகுந்து நிரைநிரை வகுத்த வகையமை விளக்கம் வான மீனின் வயின்வயினிமைப்பவுஞ், சிறுதுடி மருங்கிற் கருங்கண் நுளைச்சியர் எழுவரும் எண்மரும் உழியுழிக் கைபிணைந்

10 தொருவா மரபிற் குரவை யயரவும், அவர்தரு சிறாஅர் சிறுமீன் முகந்து மணலகழ் கேணியின் முறைமுறை விடுத்தும் பொரிகெழு புன்னைப் பூந்துணர் வீழ்ப்பப் புரிவளை யெறியக் கோடு தாக்கிப்

15 பலவே றுடைந்த நலங்கிளர் நித்திலங் கொழுவிய நனையெனக் குஞ்சிப் பெய்து

(8)

(9)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/45&oldid=1586780" இலிருந்து மீள்விக்கப்பட்டது