உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை * வழீஇ வீழக் கண்களுழ்பு பெயரவுங், கொழுமட லவிழ்ந்த குழூஉக்கொள் கைதை வான்சிதர் அளாய தேங்கமழ் ஆம்பல்

20 நீறுறு தழலே போலவும் பால்கெழு குறுநடைப் புதல்வர் துவரிதழ் போலவும், அறிவின் மாக்கட்கும் அறிவு பேதுறுக்கும் புனையாப் பொற்பின் முறைமுறை சிறப்பவும், நெய்தல் சான்ற கைதையங் கானல்

25

ஒற்றியூ ரமர்ந்த வெற்றிவேற் குரிசில்!

கொன்னொன்று கிளக்குவென் கேண்மதி பெரும! நீயே, ஆருயிர்த் தொகுதிக்குப் பேறுதரல் வேண்டி ஐந்தொழில் இயற்றுவை மாதோ, யானே ஒருநெறி யின்றிப் பொறிவழி யோடி

30 ஐம்புலன் நுகர்ந்தாங் கமைகுவெ னன்றே, நீயே, மக்கண்மேற் கொண்ட பொச்சமி லன்பிற் றாயே யனைய வளியினை, யானே

35

40

மனைவியும் மக்களும் பொருளெனக் கொண்டு நினைவதொன் றில்லாப் பேரன் பினனே,

நீயே, யானைவெண் மருப்புந் தேனின் இறாலும் மயிற்றழைப் பீலியும் விரைகமழ் சாந்தமும் ஒருங்குதலை மயங்கிய இரும்பெருங் குன்றத் தானா துறையும் இயல்பினை, யானே புலமில் கல்வியும் நலமில் புகழும்

வழுவிய வொழுக்கமுங் கழுவாக் குற்றமும் ஒருவழி யமைந்து பெருகிய செருக்கெனுங் கோடுகெழு குன்றிற் பீடுறு குவெனே,

நீயே, அறல்நெறித் தன்ன செறிகுழற் கற்றையும் பிறைசெறித் தன்ன நறைகமழ் நுதலுங்

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/46&oldid=1586782" இலிருந்து மீள்விக்கப்பட்டது