உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

45

மறைமலையம் – 20

கயலிணைத் தன்ன அகலிரு விழியுங் குமிகைமுகிழ்த் தன்ன அமைவரு மூக்கும் பளிங்கின் அன்ன துளங்கொளிக் கதுப்பும் வள்ளை யன்ன தெள்ளொளிச் செவியுங் குலிகந் தோய்த்த இலவுறழ் இதழும்

50 முறுவல் பூப்ப மின்னென மிளிருங் குறுமுத் தன்ன சிறுமுள் ளெயிறுங் கொழுநீர்ப் பணிலத்து விழுமிய கழுத்தும் எமக்கருண் மரபிற் றமக்கமை கையுஞ் சிவிறிவிரித் தன்ன சிறுதிரு வடியும்

55

எம்முளம் நீங்காச் செம்மையிற் றோன்ற வீறுகெழு பகுதியின் வேறிரு மடவார் கூறுகொண் டிருபுடை விளங்கச் சீறிய மயின்மிசை வருகுவை மன்னோ, யானே கருநெறி மறமும் அருகிய வறிவும்

60 விரிவுறு மயக்கமுந் திருகிய சினமுந் தொண்டர்ப் பணியா நாணமும் எண்டோண்

65

முக்கட் பெருமான் பெரும்புகழ் நக்குச் சமையக் கணக்கர் அமைவில கூறும் புல்லுரை கொள்ளும் பொல்லாக் கிழமையும்

வெகுளியொடு படூஉந் தகையின் மாற்றமும் அறிவோர் நகைப்ப மடவோர் திகைப்பப்

பொருளொடு பொருந்தாப் புகுந்துசொன் மொழியும்

உறுவரைப் பேணா தெழுமிறு மாப்பும்

எளிவந் தோரும் இரவன் மாக்களும்

70

அழுவிளிக் கம்பலை கொள்ளக் குழைவின்றிப்

பழுதுறச் சென்றாங் கெறிந்துநகு முருடும்

அறிவொடு படாஅச் சிறுதொழின் முறைமையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/47&oldid=1586783" இலிருந்து மீள்விக்கப்பட்டது