உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை * நீங்கா மரபின் ஓங்கிப் பொலிய

யானென தென்னுங் கூனற் கிழத்தியர்

75 பெரும்புறங் கவவி வயின்வயின் அமைத்து மறந்தேர் வாழ்க்கை மயின்மிசைக் கொண்டு சிறந்ததோர் திறத்திற் சிவணுவெ னன்றே, நீயே, காந்தளங் கண்ணி யேந்திய மார்பத்துச் செஞ்சாந்து நீவிய சிறந்த கோலமொடு

80

குறவர் மகளிர் விழவொடு குழீஇ

வெறியயர் களத்தில் விளங்குவை, யானே முல்லையந் தொடலை முருகெழ அணிந்து வெண்சாந்து பூசிய கேழ்கிளர் மார்பமொடும் இழிசின மகளிர் இயைந்த இன்ப

85 வெறியாடு களத்து வெளிப்படு குவெனே, எனவாங்கு நின்னொடு மென்னிடைப் பட்டவிவ் வியைபால் எனக்குநீ அருடரல் இயையுந், தனக்கு

90

நிகரா குநரொடு நகைதரு கேண்மை செயலா குவதென மொழிகுவர், அதனால்

நுந்தையும் முனிகுவன் அல்லன் அன்னையும் நுந்தை வழிப்படூஉந், தகையண், மைந்துகெழு பொருப்பைப் போழ்ந்து விருப்பொடும் எதிர்ந்த அரிமா முகத்தனைப் பொரிபட நூறிக்

காழுறு மரக்கரை நூழி லாட்டிப்

95 பொரியரை மாவாய் விரிகடன் மூடிய சூர்முதன் முதலற முருக்கிப் பேரருள் அழிவுபடும் உள்ளத்துப் பழியொடு பிறங்கும் உலையா வாழ்க்கைத் தேவர்க்குத் தலைமையொடு நல்குந் தமிழ்கிழ வோயே.

23

(10)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/48&oldid=1586784" இலிருந்து மீள்விக்கப்பட்டது