உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

-

மறைமலையம் - 20

11. பிரிவாற்றாத தலைவி மதியொடு வருந்தல்

கிழமை நினையாத கேள்மதியே! ஒற்றிக்

குழகன் பிரிந்த குறிப்பாற் – பொழுதறிந்து

செல்லுமுயிர்ப் பேதைக்குத் தீங்கிழைப்பாய் நின்னையடும் வல்லரவைக் கொல்லா மயில்.

12. தோழி பருவங்காட்டி வற்புறுத்தல் மயின்மீ திவர்ந்து திருவொற்றி யூர்ச்சென்ற மன்னவர்தாம் அயின்மேல் அமர்த்தகண் ணாய்பிரிந் தாரல்லர் அன்புமிக்குப் பயினோடு சேர்த்திய கற்போற் றுணையைப் பயிர்ந்தகுரற் குயின்மா வொடுங்கும் பொழுதும்வந் தன்றினிக் கூடுவரே.

5

13. அருள் நிலை வியத்தல்

கூடிய இருளின் வாடுவ தொன்றோ பீடுயர் நின்புகழ் நாடா தொன்றோ பெறுவ தறியாச் சிறுமை யொன்றோ மருவரக் கிடந்த தெரிவில் காலத்துப்

பொருவில் இன்பந் தருவது குறித்துப் புன்முத லாகிய மெய்யிற் புகுத்தி ஓரறி வுறுத்தினை சிலநாட், சிலநாள் நந்துமுத லாகிய வுடம்பிற் புகுத்துத் தந்தனை ஈருணர் வன்றே, சிலநாட்

10 சிதன்முத லாகிய குரம்பையிற் செலீஇ மூவுணர் வுணர்த்தினை மன்னோ, சிலநாள் நண்டுமுத லாகிய பொன்றுடற் கடவி நான்கறி வோங்குறச் செய்தனை, ஈங்கு மாவும் மாக்களும் மேவிய பின்றை

15

ஐயுணர் வெங்கும் மெய்பெறக் கொளுவி ஒழுங்குற உணர்த்தினை யொருசில பகலே,

(11)

(12)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/49&oldid=1586785" இலிருந்து மீள்விக்கப்பட்டது