உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை ஆங்ஙனம் ஒழிந்த அளவில் காலத்து நிறைவுறு குற்றம் முறைமுறை தேயப்

பகுத்துணர் காட்சி மிகுத்துத் தோன்ற

20 மக்கள் யாக்கையிற் றக்கவா நிறுவிப் பலபிறப் புறீஇய நாள்களும் பலவே, அவ்வா றொழிந்தன போகச், செவ்விய இந்நாள் எனக்கு நன்னெறி காட்டச்

25

30

35

40

செவ்வந்திப் போந்த பொய்யா நாவிற்

செந்தமிழ் வரம்பு முந்துகண் டுணர்ந்து

மெய்ப்பொரு ளறிவுஞ் சொற்பொருள் வன்மையும் பொறையுஞ் செறிவும் நிறையக் கொண்டு

தமிழ்மா ணாக்க ரமிழ்தென நுகர

விரித்துரை கிளக்குந் தெரிப்பரும் பெருமை

நாரா யணனெனுந் தோலாப் புலவோன் நேர்படு முளத்துச் சீர்பட வமர்ந்து கருவிநூ லுணர்த்தினை பலவே, யதற்பின் ஒருவா யாணர் மருவுறு சென்னைத் தவம்பெறத் தோன்றி நவையறு தமிழும்

வடநூற் பரப்பும் நிலைகண் டுணர்ந்தாங் குள்ளுறை கருவாய்த் தெள்ளொளி விரிக்குஞ் சைவ சித்தாந்த முடிபொரு ளெடுத்தீங் கறங்கரை நாவிற் றிறம்பட விளக்கிப் புறம்படு சமயப் பொய்ப்பொருள் நூறி

நலங்கிளர் தன்மையும் புலங்கொளாக் காட்சியும் இயைந்தொருங் கீண்டிய அமையாப் பெருமைச்

சோம சுந்தரத் தோமறு குருவன்

வி

உடல்பொரு ளாவி யிடமெனக் கொண்டு

பொருளார் சைவந் தெருளுறக் கொளீஇ

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/50&oldid=1586786" இலிருந்து மீள்விக்கப்பட்டது