உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

45

50

❖ - 20❖ மறைமலையம் – 20

யதற்கமை பொருளும் நீயெனக் காட்டித்

திறப்பட வுணர்த்தினை மிகவே, யதற்பின் தொழும்புபூண் டொழுகும் அழுங்கா வுள்ளத்துத் தொண்டரும் நரகரும் அண்டரும் பிறரும் வழிவழி யடிமை பெருகுற வெழுதிய

ஓலை கொண்ட வொருமர பானும் உலகிற் சிறந்துதா னொன்றே யாகியும் அலகி லாற்றல் தலைவரு மென்பது வல்லொற் றாக்கிய குறிப்பி னானும் ஒற்றை யியக்கும் உயிரே போல

55 நெற்றியங் கண்ணன் நிலவுத லானும்

இறைவன் ஐந்தொழில் நிறையுயிர் மாட்டுப் பொருந்தச் செய்யும் அருந்திற லானும் ஐந்தொழிற் பட்ட ஆருயிர்த் தொகைகட்

கந்தழிப் பொருத்தும் மைந்தி னானும்

60 ஒற்றியூ ரெனும்பெயர் முற்றத் தோன்றும் பெருநன் மாநகர் திருவிற் பொலிந்து, குவளை பூத்த பவளத் தாமரை

செவிரமும் பணிலமும் புடைபட இடையிற் றோன்றி யன்ன காண்டகு திருமுகங்

65 கருநெறிக் கூந்தலும் பெருகிய கழுத்தும் மேலுங் கீழுந் தோன்ற வாலிய நறுமுத் தன்ன முறுவல் செறிதொறும் மின்னென மிளிரும் பொன்மா மேனி மகளிரொடு விளங்குந் தகைசால் தோற்றத்து

70 வடிவே லேந்திக் கடிமயிலூர்ந்தென் உள்ளத் தாமரை விள்ளற்வீற் றிருந்தனை, பகலொளி விளக்கும் பல்கதிர் ஞாயிறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/51&oldid=1586787" இலிருந்து மீள்விக்கப்பட்டது